December 6, 2025, 11:20 PM
25.6 C
Chennai

குரூப் குரூபா இணைக்கறதுல இருந்து தப்பிக்க வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் !

Whatsapp - 2025வாட்ஸ் அப் : இன்று உலகமே இதில் தான் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது. வாட்ஸ் அப் இல்லாதவர்களோ, அதனை பயன்படுத்தாதவர்களோ இருக்க முடியாது. எல்லா செயலியைப் போல இதிலும் நன்மை தீமை உள்ளது.

தேவையில்லாத மெசஜஸ் செய்து நேரம் மற்றும் போனின் இடத்தை அடைப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.மேலும் நம் எண்ணை அறிந்த அதிகம் அறிமுகம் இல்லாத நபர் நம்மை ஒரு குரூபில் இணைப்பார்.

நமக்கு விருப்பமில்லாத வாட்ஸ் அப் குரூப்களில் இணைக்கப்படுவதைத் தடுக்க, புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது வாட்ஸ் அப். இந்த வசதியைச் சிலருக்கு மட்டுமே வழங்கி சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். சோதனை முயற்சி வெற்றிபெற்றால் இந்த அப்டேட்டை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய வசதியின்படி வாட்ஸ் அப் குரூப்களில் நம்மை யாரெல்லாம் இணைக்கலாம் என்பதை நாமே தேர்வு செய்து கொள்ளும் வசதி இது. இந்த அப்டேட்டைப் பயன்படுத்த முதலில் அக்கவுன்ட் >பிரைவசி > குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (யாருமில்லை, என் தொடர்பாளர்கள் அல்லது எல்லோருக்கும்) ஆப்ஷனில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். Nobody(யாருமில்லை) என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், குழுவில் உங்களையும் இணைக்கட்டுமா என்ற இன்வைட் மெசேஜ் வரும். விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம். இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.

அந்த இன்வைட் மெசேஜ் மூன்று நாட்களில் காலாவதி ஆகிவிடும். My contacts(என் தொடர்பாளர்கள்) என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் மொபைலில் எண்ணைப் பதிவு செய்து நம்மோடு contacts  வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே நம்மை குரூப்களில் இணைக்க முடியும். Everyone(எல்லோருக்கும் ) என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், யார் வேண்டுமானாலும் நம் அனுமதியின்றி குரூப்களில் இணைக்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories