பிஞ்சு கால்களை சுடுநீரில் வைத்த மூதாட்டி ! கதறி துடித்த குழந்தை ! பதறி வந்த தாய் !

அடடே... அப்படியா? உலகம் கிரைம் நியூஸ் லைஃப் ஸ்டைல்

baby 2 - 2026குழந்தை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதன் சிரிப்பும், கொஞ்சலும், மழலையும்,தத்தி தத்தி நடக்கும் அழகும்… மயங்காதவர் யாருண்டு ?  குழந்தை அழும் சத்தம் கேட்டால் சாதி, மதம், நண்பர், எதிரி, பணக்காரர், ஏழை என பாரபட்சம் இல்லாமல் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்ய எல்லோருமே ஓடோடி வருவார்கள்.baby 1 2 - 2026அதே சமயம் கூலிக்காக குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபடுபவர்கள் குழந்தையின் சுட்டிதனத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் மேலைநாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கிறது

அமெரிக்காவில் சட்டனூகா நகரத்தில் டென்னசி பகுதியில் 2 வயதான பெண் குழந்தையை வளர்ப்பு பாட்டி கொதிநீரில் போட்டு காயங்களுக்குள்ளாக்கிய கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.baby 2 1 - 2026கெய்லி ராபின்சன் என்ற குழந்தையின் கால்களை கொதிக்கும் நீரில் போட்ட பின் சிவப்பு காயங்கள் மற்றும் கொப்புளங்கள் கணுக்கால் முதல் கால்விரல்கள் வரை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்று குழந்தையை தாய் வளர்ப்பு பாட்டியிடம் விட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார் குழந்தையின் தாயான பிரிட்டானி ஸ்மித் .devil - 2026குழந்தைக்கு காயத்தை ஏற்படுத்திய பின் வளர்ப்பு பாட்டி தாயிற்கு அழைப்பு எடுத்த வீட்டிற்கு வரும் படி கூறிய போது குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது.

வீட்டிற்கு வந்து தாய் குழந்தையை பார்த்தபோது மகள் வேதனையுடன் அழுவதைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையின் காயங்களை கவனித்த  மருத்துவர்கள் இரு கால்களிலும் ஒரே மாதிரியாக அதிர்ச்சியளிக்கும் காயங்கள் வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளன.

பின்னர் குழந்தைக்கு தோல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் கால்களை இழக்க நேரிடும் என்று வைத்தியர்கள் தாயை எச்சரித்துள்ளனர்.

அடுத்த வாரம் குழந்தையின் தொடையில் இருந்து சிறிது சதையை எடுத்து அறுவை கிசிச்சை செய்யவுள்ளதாகவும்,  குழந்தை மிகவும் நோய்த் தொற்றுக்கான ஆபத்திலுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூதாட்டியின் கொடூர செயலால் 2 வயது குழந்தை மருத்துவமனையில் முடங்கி நகரக் கூட முடியாமல் படுத்துள்ளது.குழந்தை என்றாலே அங்கு ஓடுவதும் இங்கு ஓடிவருதம் சேஷ்டை செய்வதும்தான்.

குழந்தை தவறாக நடந்து கொண்டதற்காக தண்டனை கொடுத்தாக வளர்ப்பு பாட்டி கூறியுள்ளார்.இது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை பராமரிப்பாளராக இருந்த வளர்ப்புப் பாட்டி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது மோசமான குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் 150,000 பவுண் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

1 thought on “பிஞ்சு கால்களை சுடுநீரில் வைத்த மூதாட்டி ! கதறி துடித்த குழந்தை ! பதறி வந்த தாய் !”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.