பயங்கரவாதிகள் ஊடுருவல்: தில்லி போராட்டத்துக்கு நன்றி சொல்ல வந்திருப்பாங்க தலிவரே..!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

pakistan terror funding3 - 2026

தமிழகத்தில் ஆறு தீவிரவாதிகள் ஊடுறுவல் -செய்தி… டெல்லி போராட்டத்துக்கு நன்றி சொல்ல அறிவாலயம் வந்துருப்பாங்க தலைவரே…

இப்படித்தான் கருத்துகள் டிவிட்டர் சமூகத் தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. நேற்று காஷ்மீர் விவகாரத்தில், 370 பிரிவு ரத்து செய்யப் பட்டதற்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்த திமுக., பின்னர் அதனை கைது செய்யப் பட்ட காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முடித்துக் கொண்டது.

ஆனால், தொடக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்த போது, திமுக., தலைவர் ஸ்டாலின், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் குரலை எதிரொலித்துப் பேசியிருந்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பாகிஸ்தான், தங்களுக்காகப் பேசுவதற்கு இந்தியாவில் திமுக., என்ற ஒரு கட்சி இருக்கிறது என்று ஊடகத் தகவலில் தெரிவித்தது. இந்தியாவில் 2019 தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழும் திமுக., நமக்காகப் பேசுவதற்கு இருக்கிறது என்று ரேடியோ பாகிஸ்தான் அதற்கு நன்றியும் தெரிவித்தது.

பாகிஸ்தானின் டான் பத்திரிகையும் இது குறித்து நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், இன்று தமிழகத்துக்குள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி உள்பட ஆறு பயங்கரவாதிகள் ஊருவியுள்ளனர் என்று உளவுத் தகவல் வெளியானது. இதை அடுத்து தமிழகம் முழுதும் போலீஸார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர்.

இருப்பினும், நேற்று தில்லியில் பாகிஸ்தானுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக.,வுக்கு நன்றி சொல்வதற்கே, பாகிஸ்தான் தனது பயங்கரவாதிகளை தமிழகத்துக்கு, குறிப்பாக அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் செய்யப் பட்டு வருகிறது. திமுக.,வின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று பலரும் வருத்தப் படுகிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.