தமிழகத்தில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் கூட்டு… உஷார் உஷார்!

Published:

rbvs manian - 2026

இன்றைய தலைப்புச் செய்தி- தமிழகம் எங்கும் இஸ்லாமிய பயங்கர வாதிகள் ஊடுருவல். இது காவல்துறையின் எச்சரிக்கை. இதனை நான் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். 1998ல் கோவையில் அத்வானி வந்த போது குண்டுகள் வெடித்தன.

நான் அப்போதே சொன்னேன் இது அத்வானிக்காக வைக்கப் பட்டதல்ல. கோவையில் உள்ள ஹிந்துக்களை பயமுறுத்தி வெளியேறச் செய்வதற்காகவே என்று நான் சொன்னேன். குறிப்பாக நூற்பாலைகளை மூடிவிட்டு தொழிலதிபர்கள் வெளியேற வேண்டும். பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வேண்டும்.

இது நெடுநாளைய திட்டம். 1930லேயே ரஹ்மத் அலி சௌத்ரி வகுத்துத் தந்த திட்டம். தென் பாரதத்தில் மாப்ளிஸ்தான் என்பதாக ஒரு முஸ்லீம் நாட்டை உருவாக்க அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் இது ஒன்று. அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். நாமோ மெத்தனமாகவே இருக்கிறோம்.

1969ல் நம்பூதிரிபாடு மலப்புரம் மாவட்டத்தை ஏற்படுத்தினார். அதனை ஜனசங்கம் எதிர்த்தது. பிரயோஜனம் இல்லை. இன்று முழுமையான முஸ்லீம் மாவட்டமாக அது மாறிவிட்டது. இதுதான் மாப்ளிஸ்தானின் தொடக்கம்.

இன்று அங்கு ரம்ஜான் நோன்பினபோது எந்த ஹிந்து ஹோட்டலும் திறக்கக்கூடாது என்பது சட்டம். மலப்புரத்தில் அரசுப் பாடசாலைகள் அனைத்திற்கும் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை. ஹிந்துக்கள் சொத்துகள் வாங்க விடுவதில்லை அங்குள்ள முஸ்லீம்கள்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மாப்ளிஸ்தான் அங்கு தொடங்கி பாலக்காடு கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு திண்டுக்கல் வரை நீள்கிறது. இது திப்பு சுல்தான் படையெடுத்து வந்த பாதை. இந்த மாவட்டங்களை தனி முஸ்லீம் நாடாக்கும்வரை முஸ்லீம்கள் ஓய மாட்டார்கள்.

இப்போதைய இலங்கை குண்டு வெடிப்பு அதில் தமிழக தாவ்ஹீத் ஜமாத்தின் பங்கு இதையெல்லாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். கோவை கோட்டைமேடுதான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண். காஷ்மீரிலிருந்து பல இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆகஸ்டு 5 ஆந்தேதிக்குப்பின் தமிழகத்திற்குள் ஊடுருவி விட்டதாக ESP intelligence தகவல் தருகிறது.

வினாயக சதுர்த்தியின்போது மட்டுமல்ல இனி எப்போதுமே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து உள்ளது. சில தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் இவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் கேள்வி.

LTTE ஆட்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருவதையும் மறுக்க முடியாது. மாப்ளிஸ்தான் உருவாக பல சதிகள் வேகமாக அரங்கேறி வருகின்றன. உஷார்! உஷார்!உஷார்!

  • ஆர்.பி.வி.எஸ்.மணியன்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img