அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது., இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு இந்துக்களிடமே கொடுக்க வேண்டும், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருடத்திற்கு ரூ 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இருப்பினும் அறநிலையாத்துறை அதன் பணியை சரியாக செய்வதில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு கொடுக்க போராட்டம் நடத்தினோம். மீண்டும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம். ஆதலால் தமிழக அரசு எங்களது கோரிக்கையை செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கையில் எடுத்து அக்காரியங்களை செய்வோம் என தெரிவித்தார். மேலும் திராவிட கழகம் இந்து விரோத போக்கினை தொடர்ந்து செய்து வருகிறது. தாலி அறுப்பு போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என்னும் மாவட்டம் தோறும் செயல்படுத்தி வருகிறது. திராவிடர் கழகத்தினை தமிழக அரசு கண்டிப்பதோடு, தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் வீரமணியை கைது செய்ய வேண்டும் எனவும், வருகின்ற மே மாதம் 17 ம் தேதி கோட்சே சிலை ஈரோட்டில் வைக்க உள்ளோம். இது எங்களது உரிமை. உயர் நீதிமன்றமே 1966 ல் கூறி இருக்கிறது. கோட்சேவின் சிந்தனைகளையும், சித்தாங்களையும் வெளிக்கொணர்வதில் எந்த தடையும் இல்லை என்று கூறி உள்ளது. ஆதலால் கண்டிப்பாக அவரது சிலையை நிலைநிறுத்துவோம் என அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் தெரிவித்தார்.
ஈரோட்டில் மே 17ல் கோட்சேவுக்கு சிலை: அகில பாரத இந்து மகா சபா
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari