இங்கே ஸ்டாலின், ராகுல்.. அங்கே இம்ரான்..! என்னாது..? ஜெர்மனியும் ஜப்பானும் அண்டை நாடுகளா?!

Published:

imrankan - 2026

தொழிலதிபரும் மஹிந்த்ரா நிறுவனங்களின் தலைவருமான ஆனந்த் மஹிந்த்ரா தனது டிவிட்டர் பதிவில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில், இம்ரான் கான் குறித்து பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்த்ரா, நல்லவேளை கடவுளுக்கு நன்றி. இந்த நபர் எனது வரலாறு அல்லது புவியியல் ஆசிரியராக வரவிடாமல் செய்ததற்காக! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படி என்ன அந்த வீடியோவில் இம்ரான் பேசியிருந்தார்?

ஜெர்மனி, ஜப்பான் இரு நாட்டுக்கும் அதிக வணிகத் தொடர்பு இருந்தது. இரு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களையே மில்லியன் கணக்கில் கொன்று தீர்த்தன. இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்து ஜெர்மனியும் ஜப்பானும் அப்படி இருந்தன. அதன் பின்னர் அவை இரண்டும், தங்கள் நாட்டு எல்லைகளில் கூட்டு தொழிலகங்களை ஏற்படுத்தின. அது வணிக நோக்கத்துடன் அமைந்திருந்தன… – என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார் இம்ரான் கான்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

இதனை பகிர்வு செய்துள்ள ஆனந்த் மஹிந்த்ராவின் டிவிட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தானியர்களும் பாகிஸ்தான் ஆதரவு நபர்களும், இந்த விவகாரத்திலும் மோடியை இழுத்து விட்டு டிவிட்டி வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஒருவர், இதுதான் இம்ரான் கானின் அறிவு! ஜெர்மனியும் ஜப்பானும் பொதுவான எல்லையைக் கொண்டிருந்தனவா? ஜப்பான் நாடு எந்த நாட்டுடனும் எல்லையைக் கொண்டிருக்கவில்லை! இம்ரான் கானின் அதிர்ஷ்டம் என்னவென்றால், பெரும்பாலான பாகிஸ்தானியரும் படிப்பாளிகள் அல்லர். அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் அவரது வார்த்தையை ‘அறிவுபூர்வமான தலைவர்’ என்று சொல்லி ஏற்கின்றனர். இங்கே ராகுலும் இம்ரானும் ஒரே புத்திசாலித்தனத்தைக் கொண்டவர்கள்தான்! – என்று கருத்திடுகின்றனர்.

எல்லைகள் பற்றிய விவாதத்தில் ஒருவர், எல்லா நாடுகளும் இப்படி எல்லைகளைப் பெற்றிருக்காது. உலகத்துக்கு இரு நாடுகளின் எல்லைகள் எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இந்தியா உதாரணத்தைக் காட்டியுள்ளது… என்று குறிப்பிட்டு, இந்திய – பூடான் எல்லை படத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதில், வலது புறம் இருப்பது இந்தியா, இடது புறம் இருப்பது பூடான்… 699 கி.மீ., தொலைவுக்கு இரு நாட்டு எல்லைகளும் உள்ளன. எல்லா நாடுகளின் எல்லைகளிலும் ராணுவம் தேவைப்படாது! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img