சமூக ஆர்வலர் மாரிதாஸ் மீது திமுக., புகார்! ட்ரெண்ட் ஆகும் #WeSupportMaridhas

Published:

maridhass - 2026

சமூக ஆர்வலர் மாரிதாஸ் மீது திமுக., நேற்று புகார் ஒன்று கொடுத்த நிலையில், அவருக்கு பாஜக., மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், திமுக., எதிர்ப்பாளர்கள் என பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

திமுக.,வின் உண்மை முகம் என மாரிதாஸ், சில வீடியோ பதிவுகளை இணையத்தில் வெளியிட்டார். ஒரு பதிவில், காஷ்மீர், பிரிவினைவாதிகள், திமுக., தொடர்பு என பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இது திமுக.,வினருக்கு கடும் கோபத்தை வரவைத்திருக்கிறது.

திமுக., தொண்டர்கள், ஆதரவாளர்கள், மாரிதாஸ் வாக்கிங் போகும் போது நம்ம வழக்கப்படி சோலிய முடிச்சிராம… வேடிக்கை பாக்கிறீங்களே என்று கருத்துப் பதிவு செய்து மேலும் சூட்டைக் கிளப்பினர்.

இந்நிலையில், திமுக., மீது அவதூறுக் கருத்துகள் பரப்பப் படுவதாகக் கூறி, மாரிதாஸ் மீது திமுக., தரப்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், மாரிதாஸுக்கு ஆதரவாக, பாஜக.,வின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது கருத்தைப் பதிவு செய்தார். அவரது டிவிட்டர் பதிவில்….

இந்நிலையில், மாரிதாஸுக்கு ஆதரவாக, டிவிட்டர் பதிவுகளில் #WeSupportMaridhas என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கப் பட்டு வருகிறது.

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

https://twitter.com/search?q=%23WeSupportMaridhas&src=typeahead_click

மாரிதாஸ் மீதான திமுக.,வின் புகார் குறித்து, ராஜா சங்கர் என்பவர், தனது பேஸ்புக்கில் பதிவு செய்த கருத்து…

Maridhas M ஜிக்கு ஹிந்துக்களாகிய நம் ஆதரவு எப்போதும் உண்டு. அதோடு.. தொடர்ந்து பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இவர் மீது காழ்ப்புணர்வு காரணமாக தேசவிரோத திமுக தற்போது பொய் வழக்கு போட்டுள்ளது.

ஆக.. மறுபடியும் திமுக.. காங்கிரஸ் எப்படி மோதிஜிக்காக தேர்தல் நேரத்தில் பிரசாரத்தில் இறங்கி உதவியதோ அதே போல.. அதே ஸ்டைலில் இங்கு முழுமுயற்சி எடுத்து நம் மாரிதாஸை பெரிய அரசியல் ஆளுமை உடையவராக ஆக்காமல் ஓய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது..!

நடக்கட்டும் இவர்கள் பணி..! ???????????? ஏனென்றால் ஒரு நல்ல பிஜேபி ஆதரவாளர் இல்லாமல் தமிழகமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது..! 

திராவிட மு***** கழகம் இப்போது அருமை நண்பர் மாரிதாஸ் அவர்கள் மீது மதக்கலவரத்தை தூண்டுவதாக புகார் கொடுத்துள்ளது.

என்னாடா வழக்கமா வாங்கிங்க் போனா போட்டுத்தள்ளுவானுக என்ற நிலையிலே இருந்து இப்போது என்ன தீடிரென திருந்திட்டானுக என நினைக்ககூடாது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

அந்த புகாரிலே முஸ்லீம்களுக்கு முஸ்லீம் அல்லாதோருக்கும் இடையே பகையை அருமை நண்பர் மாரிதாஸ் வளர்ப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே நல்லா கவனிங்க

//However, it is evident from a cursory watching of the video that Mr. Maridhas primarily intends to disturb public tranquility and promote enimity and incite hatred between religious groups, namely Muslims and non-Muslims. Mr. Maridhas uses the recent policy statements issued by the DMK to buttress his efforts to ultimately create public mischief and hopes to create ill-will against Muslims, who are a minority in India.//

இந்துக்கள் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் முஸ்லீம் அல்லாதோர் என சொல்லியுள்ளது.

அதுவும் காஷ்மீரிகளுக்கு ஆதரவு அளிப்பதை தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லி அது காஷ்மீர முஸ்லீம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என சொல்லுகிறார் என சொல்கீறது

//Therefore, the support extended by DMK towards the people of Kashmir for their fundamental rights like free speech and assembly, representative democracy and protection from unlawful arrest is being willfully misconstrued by Mr.Maridhas as support for terrorists. By doing so, Mr. Maridhas is portraying Muslims in Kashmir as terrorists and, thereby, creating ill-will against that group of people.//

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அதாவது திமுக மீது தவறு சொன்னதாக புகார் இல்லை.

மதக்கலவரத்தை தூண்டுவதாக புகார் கொடுக்கப்பட்டு அதிலே நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

திமுக மீது பொய் சொன்னார் என சொன்னால் நீதிமன்றத்திலே மானநஷ்ட வழக்குத்தான் போடலாம்.

எனவே இதை மதக்கலவர வழக்கு என கொண்டு போய் உள்ளதுகள்.

காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என பார்க்கவேண்டும்.

இந்துக்களுக்கு எதிராகவே தமிழக காவல்துறை இருப்பதாக இருக்கும் ஒரு கருத்து இந்த விஷயத்திலே என்ன நடவடிக்கை எடுக்கீறார்கள் என்பதை பொறுத்து தெரியவரும்.

எது எப்படீருந்தாலும் நண்பர் மாரிதாஸை ஆதரிப்பது அவசியம்.

குறிப்பு : மு**** என்றால் என்ன என உங்களுக்கு தெரியும்.

– Raja Sankar 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img