எதையும் சவாலாக எதிர் கொள்பவர் சிவன்! மீண்டும் சாதிப்பார்! உறவினர்கள் உருக்கம்!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை தொழில்நுட்பம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sivan family - 2026

விக்ரம் லாண்டர் தோல்வியிலிருந்து இஸ்ரோ தலைவர் சிவன் நிச்சயம் மீண்டு வருவார் என்று அவருடைய குடும்ப உறவுகள் நம்பிக்கையாக உள்ளனர்.

உலகம் முழுவதும் நேற்று இந்தியாவை கவனித்துக் கொண்டிருந்தது. சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சென்றடைய வேண்டிய நாளான நேற்று, வெறும் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் அதன் விக்ரம் லாண்டர் விழுந்து நொறுங்கியது.

மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்த அனைத்து இந்தியர்களின் மனதிலும் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை ஒர் காட்சியாய் காணும் நமக்கே இப்படி என்றால், உணவு உறக்கம் விடுத்து, உற்றார் சுற்றம் துரந்து பல ஆண்டுகளாக கனவினை சுமந்து அதனை கையகப்படுத்திக் கொள்ளும் நேரம் இவ்வாறு நேர்ந்தது இதனில் பங்களித்தவர்களுக்கு ஏற்படும் துயரம்தனை சொல்லத் தேவையில்லை.

pm modi isro sivan1 - 2026

அப்படி ஒரு சூழலில் இஸ்ரோ நிறுவன தலைவர் சிவன் நேற்று உணர்ச்சிகளுக்கு உட்பட்டிருந்தார். அந்த உணர்ச்சி அவரின் கண்களில் கண்ணீராய் பெருகியது. அதுவும் பிரதமரிடம் அவர் அதனை வெளிக்காட்டும் அளவில் பெருக்கெடுத்தது. உடனடியாக பிரதமர் நரேந்திர மோடியும் கட்டி அணைத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரோ நிறுவன தலைவரின் உறவினர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். சிவன் அவர்களின் மாமா உறவான சண்முகவேல் என்பவர் கூறுகையில், “சிவனின் முயற்சி தோல்வி அடைந்ததை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

நிச்சயமாக அவர் இதனை தோல்வியாக கருதமாட்டார். அவர் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் சிறு வயதிலேயே நிறைய சவால்களை சந்தித்து அவற்றை நொறுக்கி அடித்தவர். இது அவருக்கு ஒன்றும் பெரிதல்ல” என்று கூறினார்.

அவருடைய மனைவியான தங்கம் கூறுகையில், “சிவனின் கண்ணீர் தற்காலிகமானது. கூடிய விரைவில் அதனை சந்தோஷமாக மாற்றிக்காட்டுவார். என்று கூறினார். இத்தனை கால உயர்வுக்கும், முயற்சிக்கும் அவருடைய மனைவியான மாலதி மிகவும் முக்கியமானவர். அவரின் பலமே சிவனின் பலம்” என்று கூறினார்.

இந்தியாவே அவர் பின்னே உள்ளது அதனால், இஸ்ரேல் நிறுவனத்தலைவர் நிச்சயமாக மீண்டுவந்து, மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.