மகளாய் பாவித்த மாமியார்! மாமியார் உடலை சுமந்த மருமகள்கள்!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
body - 2026

மகாராஷ்டிர மாநிலத்தில் தங்களது மாமியாரின் இறுதிச் சடங்கின் போது, அவரது உடலை மருமகள்கள் நால்வர் சேர்ந்து தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுந்தர்பாய் நைக்வாடே (83) இவருக்கு 4 மகன்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து மருமகள்கள் வந்த போது அந்த நால்வரையும் மகளாக நடத்தி உள்ளார் இந்த தாய். இந்நிலையில், 4 மகன்கள், 4 மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

mother in law - 2026

அவர் கண்தானம் செய்திருந்த நிலையில், இறந்தவுடன் அவரது ஆசைப்படியே அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. தங்களை தாயாக இருந்து நன்றாகக் கவனித்துக்கொண்ட மாமியாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மருமகள்கள், இறந்த மாமியாரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்றனர். இந்த நிகழ்வு அங்குள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் மாமியார்- மருமகள் எலியும், பூனையுமாக இருக்கும் சூழ்நிலையில், இம்மாதிரியான ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மருமகளிடம் மாமியார் தாயாக இருந்தால் அவர்களும் மகளாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.