பயங்கரவாதக் குழுக்களுடன் ரகசிய கூட்டம்! காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்!

Published:

pakistan terror funding3 - 2026

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) இந்தியாவுக்கு எதிராக ‘மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ஒரு தாக்குதலை நடத்த’ திட்டமிடுவதற்காக, பாகிஸ்தான் மண்ணில் வளர்த்துவரும் பயங்கரவாத குழுக்களுடன் ‘உயர் மட்ட’ சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதன் மூலம் காஷ்மீர் குறித்த சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

டி.என்.ஏ. செய்தி குழுமத்தின் அறிக்கையின் படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாதக் குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தைபா (எல்.இ.டி), ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் பலர் இடையே ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிட ஒரு உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

masood azhar - 2026

பாகிஸ்தான் ராணுவத்தின் ‘பாதுகாப்பான ஓர் இடத்தில்’ நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் நடத்தப்படக்கூடிய பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விவரங்களை பயங்கரவாத குழுக்கள் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, மூடிய கதவுக் கூட்டத்தில் காலிஸ்தானி ஜிந்தாபாத் படை (KZF) மற்றும் பிற காலிஸ்தான் சார்பு அமைப்புகளும் இஸ்லாமாபாத்தில் நடந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. காலிஸ்தான் சார்பு அமைப்புகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் கூட்டு போராட்டங்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ., காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த ரஞ்சித் சிங் நீதாவையும் சந்தித்து ஜம்மு-காஷ்மீரில் தனது பிரிவினை இயக்குமாறு கூறியுள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
pakistan rail minister - 2026

பாகிஸ்தான் சிறையில் இருந்து பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ‘ரகசியமாக’ விடுவித்து, சியால்கோட்-ஜம்மு-ராஜஸ்தான் பிராந்தியத்தில் ஒரு ‘பெரிய நடவடிக்கைக்கு’ திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது.

மேலும் இந்த அறிக்கையின்படி, 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜஸ்தான் அருகே எல்லையில் கூடுதல் படைகளை பாகிஸ்தான் நிறுத்தியது.

இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று சர்வதேச சமூகத்திடம் இருந்து அறிவுரைகள் பெற்றதால், அவமானம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் நகர்வுகளுக்கு “முழுமையான பதிலடி” கொடுப்பதாக அச்சுறுத்தியிருந்தார்.

imrankhan - 2026

பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவும் “எந்த அளவிற்கும் செல்ல” தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

“எங்கள் காஷ்மீர் சகோதரர்களுக்காக தியாகங்களை வழங்கவும், கடைசி புல்லட், கடைசி வீரர்கள் மற்றும் கடைசி மூச்சு வரை எங்கள் கடமையை நிறைவேற்றவும்” தயாராக இருப்பதாக பஜ்வா கூறினார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்கள் மூலமே மீண்டும் இயக்குவதற்கு தயாராகி வருவது வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img