லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை : வடமாநில இளைஞரகள் 5 பேர் அதிரடி கைது!

Published:

lalithajewelleryrobeery - 2026

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை தொடர்பாக புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த 5 வட மாநில இளைஞர்களை திருச்சி தனிப்படை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு கிளைகளுடன் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது.

இதன் திருச்சி கிளை நகைக்கடையின் பின்பக்க சுவரில், ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்து கைவரிசை காட்டிய கொள்ளையரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரியில், வழக்கம் போல் நேற்று காலை ஒன்பது மணிக்கு கடையின் முன்பக்க கதவை திறந்தபோது அதன் கீழ்தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே போலீசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்வையிட்டபோது பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு அதிலிருந்து கடைக்குச் சென்று கொள்ளையர்கள் அங்கிருந்த முதல் தளத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தெரிய வந்தது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த காட்சியில் விலங்குகளின் முகமூடிகளை அணிந்த இரு நபர்கள் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு தான் கொள்ளையர்கள் உள்ளே சென்றிருக்கின்றனர்.

criam 3 - 2026

அவர்களின் மொபைல் நெட்ஒர்க் பற்றியும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

நள்ளிரவு 2.11 மணி முதல் காலை 3.15க்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்று தெரிய வந்திருக்கிறது.

கடையின் பின்புற சுவரும் அங்கே இருக்கும் பள்ளியின் சுவரும் ஒன்றே ஆகும்.

அந்த பள்ளிக்கு இது விடுமுறை காலம் என்பதால், பகல் நேரத்தில் கூட அது பூட்டியே இருந்திருக்கிறது.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், பள்ளி வாயிலாகவே பின்புறமாக வந்து, சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் கடையின் முன்பக்கம் பாதுகாவலர்கள் இருந்தும், கொள்ளையர்கள் சத்தமின்றி துளையிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

3 தனிப்படைகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் என்றும் 4 தனிப்படைகள் நகை கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

அதோடு, கொள்ளை நடந்த இடத்தில் துப்பறியும் நாய் சோதனைக்கு விடப்பட்டது.

கைரேகை நிபுணர்கள் தரைதளம் மற்றும் முதல் தளம், சுவரில் துளையிடப்பட்ட இடங்களில் தடயங்களை சேகரித்தனர்.

நகைகடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இருவரும் குழந்தைகள் விளையாட்டுக்காக அணியும் சிங்க முகம் கொண்ட முகமூடியை ஒரு நபரும், மற்றொருவர் முயல் பொம்மை முகமூடியையும் அணிந்திருந்தனர்இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை கடையில் கொள்ளையடித்தது வட மாநில கொள்ளையராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த 5 வட மாநில இளைஞர்களை திருச்சி தனிப்படை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img