IMG 20191022 WA0015 - 2026

பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் திருமலையில் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் …

ஸ்ரீவாணி டிரஸ்ட்க்கு 10,000 நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் … திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதல் ஈவோ ஏவி தர்மாரெட்டி அறிவிப்பு.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் கலியுக பிரத்யக்ஷ தெய்வம் திருமலை ஸ்ரீ பாலாஜியை அருகில் சென்று கண்ணார தரிசிக்க வேண்டும் என்று விரும்பும் பக்தர்களுக்கு டிடிடி நற்செய்தி கூறி உள்ளது.

எந்த மந்திரி எம்எல்ஏ எம்பி அரசு அதிகாரியின் சிபாரிசும் தேவையின்றி ஸ்ரீவாணி ட்ரஸ்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தினால் விஐபி தரிசன டிக்கெட் ஒதுக்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

டிரஸ்டுக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் கொடுக்கிறது இந்த புதிய திட்டம்.

ஹிந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பாகமாக எஸ்சி எஸ்டி மற்றும் பிற பின் தங்கிய மக்கள் வசிக்கும் இடங்களில் ஸ்ரீ பாலாஜி ஆலயங்கள் கட்டுவதற்கும் புராதன ஆலயங்களை பாதுகாப்பதற்கும் ஸ்ரீவாணி டிரஸ்ட் மூலம் நன்கொடைகள் ஏற்படுகின்றன என்று கூடுதல் ஈவோ ஶ்ரீஏவி தர்மாரெட்டி தெரிவித்தார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!
Tiruppathi - 2026

இதில் ஒரு பாகமாக நன்கொடை அளிக்கும் கொடையாளிகளுக்கு ப்ரேக் தரிசன டிக்கெட் கொடுக்கும் வழிமுறையை தொடங்கி உள்ளதாக கூறினார்.

இதற்காக கோகுலம் விருந்தினர் இல்லத்தில் ஆன்லைனில் சிங்கிள் விண்டோ கௌண்டர் திறந்து உள்ளதாக கூறினார்.

நவம்பர் முதல் வாரத்தில் இதற்கான தனி ஆப் தொடங்கப் போவதாகவும் அதன்பின் உலகெங்கும் உள்ள பக்தர்கள் ஆன்லைன் மூலம் நன்கொடை அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீவாணி டிரஸ்ட்க்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தருக்கு ஒரு பிரேக் டிக்கெட் ப்ரிவிலேஜாக ஒரு முறை மட்டுமே அளிப்போம் என்றும் அந்த பக்தர் 500 ரூபாய் கட்டி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையாளர்கள் ஒரு ரூபாய் முதல் எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என்றும் பத்தாயிரம் ரூபாயில் இருந்து டிடிடி அளிக்கும் சேவைகளை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார்.

tirupathi therottam - 2026

10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பிரேக் தரிசன டிக்கெட் தொடங்கி ரூபாய் 99 ஆயிரத்துக்கு 9 டிக்கெட் வரை பக்தர்கள் பெறும் வசதி உள்ளது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

ஒரு லட்சத்திற்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் டிடிடி இதற்கு முன்பு வெளியிட்டுள்ள ஸ்கீம்கள் அளித்து வருவது போலவே பலன்கள் பெற முடியும் என்றும் விவரித்தார்.

தற்போது ஒரு முயற்சி போல தொடங்கியுள்ளோம் பக்தர்களின் அபிப்பிராயம் பெற்று கோட்டா நிர்ணயிப்போம். ஒரு மாதம் முன்பே இந்த கோட்டாவை அறிவிப்போம் என்று விவரித்தார் தர்மாரெட்டி.

முதன்முதலில் சென்னையைச் சேர்ந்த கும்முடி ராமையா என்பவர் ரூ 40,000 நன்கொடை அளித்து 4 பிரேக் டிக்கெட் பெற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending