
பகீரதப் பிரயத்தனம் செய்து கோதாவரி நதியில் இருந்து ‘ராயல் வசிஷ்டா’ படகை வெளியில் எடுத்தனர் ‘தர்மாடி சத்தியம்’ குழுவினர்.
‘ஆபரேஷன் ராயல் வசிஷ்டா” இறுதியாக சக்ஸஸ் ஆனது.
பல நாட்கள் காத்திருந்த பின் தம் உறவினர்களின் உடல்கள் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏக்கத்துக்கு பிறகு படகு இன்று வெளியில் வந்தது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் கச்சலூரு அருகில் கோதாவரியில் மூழ்கிய படகினை பல தடங்கல்களுக்குப் பிறகு வெளியே எடுத்து விட்டார்கள்.

தர்மாடி சத்யம் குழுவினர் இந்த அரிய செயலை செய்து உள்ளனர். முழுகிப் போன ராயல் வசிஷ்டா படகு முழுவதும் துவம்சம் ஆன நிலையில் கிடைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை டைவர்கள் உதவியோடு மீண்டும் ஒருமுறை நீரின் அடிப்பகுதியில் இருந்து கயிறு கட்டி வெளியே இழுக்க முயற்சித்தார்கள். இம்முறை முயற்சி பலனளித்தது.
பலமுறை மழை வந்த தடை ஏற்பட்டாலும் விடாமல் முயற்சித்தார்கள்.
ஜேசிபி உதவியோடு இரும்புக் கயிறுகளை வெளியே இழுத்தார்கள். அதனால் நீரின் மேல் படகு வந்தது. படகில் 5 சடலங்கள் கிடந்தன.

‘ பாலாஜி மரைன்’ அமைப்பைச் சேர்ந்த தர்மாடி சத்தியம் குழுவினர் இதற்கு முன் இருமுறை படகை வெளியே எடுக்க முயற்சித்தார்கள்.
படகு மூழ்கிய சில நாட்களிலேயே முயன்றபோது அது பலனளிக்கவில்லை. வெள்ள ஓட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே எடுக்கும் வேலைகளை நிறுத்தி வைத்தார்கள்.
சென்ற வாரத்தில் மீண்டும் இருமுறை முயற்சியைத் தொடர்ந்தார்கள். ஆனால் இரண்டு மூன்று நாட்களாக படகை எடுப்பதில் பல தடங்கல்களை எதிர்த்து எதிர்கொண்டார்கள்.
அதனால் காகிநாடாவிலிருந்து கேப்டன் ஆதிநாராயணாவின் உதவியை நாடினார்கள்.

அதேபோல் ஸ்கூபா டைவிங் டீம் கூட களத்தில் இறங்கியது.
படகை வெளியே எடுப்பதற்கு தர்மாடி சத்தியம் விசாகப்பட்டினத்தில் இருந்து டைவர்களை வரவழைத்தார். அவர்களின் உதவியோடு கோதாவரியில் இறங்கி இரும்புக் கயிறுகளால் கட்டி படகை இழுக்க முயற்சித்தனர். ஆனால் அதுவும் இயலவில்லை.
தர்மாடி சத்யம் டீம் மீண்டும் இன்று செவ்வாயன்று முயன்று வெற்றியை பரிசாக பெற்றது.
செப்டம்பர் 15-ஆம் தேதி கோதாவரியில் மூழ்கிய படகு அக்டோபர் 22-இல் வெளியில் வந்தது. இந்த விபத்தில் 39 பயணிகள் பலியாகினர். 26 பேர் நதியில் நீந்தி உயிர் தப்பினர்.
38 நாட்களாக நீரில் ஊறிய 5 சடலங்கள் இன்று படகிலிருந்து மிதந்து வெளியே வந்தன. இன்னும் 12 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை.



