
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக பேசி பிரச்சனையை ஏற்படுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரசார் பல்வேறு இடங்களில் மனுக்களை அளித்து வருகின்றனர்
நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி காவல் நிலையத்தில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். பழனி நாடார் தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதுபோல் செங்கோட்டை காவல் நிலையத்திலும் செங்கோட்டை நகர காங்கிரஸார் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமையில் காங்கிரசார் புகார் மனு அளித்தனர்



