
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் புதிய புகைப்படம் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ஹார சிறையில் உள்ளார் சசிகலா.
இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சுடிதார் உடை அணிந்து, அவர் நின்று கொண்டிருப்பது போல உள்ளது.
இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



