அயோத்தி தீர்ப்பு: சமூகவலை தளத்தில் விஷம கருத்துக்கள்! 37 பேர் மீது வழக்கு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
8hmgq t7nzq - 2026

நேற்று அயோத்தி நிலப் பிரச்சினை வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக,சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக எதுவும் பதிவிடக்கூடாது என எச்சரித்திருந்தனர்

ஆனால் அதனை மீறி நேற்று விஷம கருத்து தெரிவித்து வன்முறையை தூண்ட முயன்றதாக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 12 முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

twitter 1 - 2026

ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலப் பிரச்சினை வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட உத்தரபிரதேச காவல்துறை, சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

3,712 சமூக ஊடக போஸ்டிங்குகள் மீது புகார் வந்ததாகவும், அந்த ஆட்சேபனைக்குரிய போஸ்ட்களை நீக்குவதன் மூலமோ அல்லது அந்த கணக்கை முடக்குவதன் மூலமோ, நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உ.பி. போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் முன்னதாக, கூறுகையிில், மாநிலத்தில் முதன்முறையாக அவசரகால செயல்பாட்டு மையம் (ஈஓசி) அமைக்கப்பட்டுள்ளது.

இது சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் என்று தெரிவித்தார். அதன்படியே கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இத்தனை பேர் சிக்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.