
பசு மாட்டின் கட்டவிழுந்த ஆக்ரோஷம் இது. கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பசுமாடு ஒரு மனிதரை தாக்கியது.
15 நாட்கள் முன்பு அதே இடத்தில் சாலை விபத்தில் அதன் கன்றுக் குட்டி பலியானது. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி சின்னக் கன்று இறந்து போனது.அந்தக் கன்று குட்டியின் உடலை ஒரு மனிதர் தன் ரிக்சாவில் எடுத்துச் சென்றார்.
இந்நிலையில், வியாழக்கிழமை அந்த ரிக்சா ஓட்டுநர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்த போது அவரை அடையாளம் கண்டு கொண்ட பசு மாடு, அந்த மனிதரை ஆக்ரோஷமாக எதிர்கொண்டு முட்டிமோதித் தாக்கியது!
அங்கிருந்தவர்கள் பசுவின் தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றி, அந்த மாட்டை விரட்டிவிட்டனர் .
பின்னர் தான் அவர் இரு வாரங்களுக்கு முன்னர், தாம் அந்த பசுமாட்டின் கன்றினுடைய உடலை எடுத்துச் சென்றதை நினைவு கூர்ந்துள்ளார். தன் கன்றை எடுத்துச் சென்றவரை நினைவு வைத்துக் கொண்டு பசு தாக்கியது குறித்து உள்ளூர் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.