Homeஅடடே... அப்படியா?ஃபேஸ்புக், டிவிட்டரில் போலியாக க்ளெய்ம் செய்து வலதுசாரிகளை முடக்குகிறார்கள்!

ஃபேஸ்புக், டிவிட்டரில் போலியாக க்ளெய்ம் செய்து வலதுசாரிகளை முடக்குகிறார்கள்!

facebook compare copy - Dhinasari Tamil

அனைவருக்கும் மாரிதாஸின் வணக்கம்…

சமீபத்தில் நான் திருமாவளவன் சார்ந்து வெளியிட்ட வீடியோவை நீக்கியுள்ளது facebook நிர்வாகம். காரணம் அதன் copy Rights வேறு ஒருவருடையது என்று.

ஆனால் நான் பொதுவாக எனது youtube channel மற்றும் page இதில் வேறு எவருடைய வீடியோ பதிவும் வெளியிடுவதில்லை. எங்களுடைய வீடியோவிற்கு copy rights போலியாக உரிமை கொண்டாடியுள்ளனர் அந்த நிறுவனத்தினர். என் வீடியோவிற்கு எவருமே 1% கூட உரிமை கொண்டாட முடியாது, நான் வீடியோ எடுப்பது முதல் Edit செய்வதற்கு வரை அனைத்தையுமே என் அலுவலகத்தில் தான் செய்கிறேன். ஆக வாய்ப்பே இல்லாத நிலையில் என் வீடியோவை இன்னொரு நபர் உரிமை கொண்டாடியுள்ளார். இது சட்ட விரோதமான செயல்.

அது Aiplex என்ற நிறுவனம் [email protected] என்ற Email முகவரி மூலம் உரிமை கொண்டாடியுள்ளது.

இதை ஏன் மக்கள் முன் வைக்கிறேன் என்றால் சமீபத்தில் facebook முழுவதும் suntv நிறுவனத்தைச் சார்ந்தோர் இதே நிறுவனத்தைக் கொண்டு, இதே [email protected] ஈமெயில் வழியே CopyRights என்று கூறிகொண்டு பல வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் பக்கங்களை முடக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் என் விடியோ நீக்கம் என்பது என் பக்கத்தை, சேனலை முடக்க எடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும். sun tv நிர்வாகம் இதனைச் செய்திருக்கும் என்றே நானும் கருதுகிறேன்.

Sun tv நிறுவனத்தை எதிர்த்து அனைவரும் ஒன்று திரள வேண்டிய நேரம் இது.

போராட்டம் நடத்தவும் , பிரதமர் வரை விசயத்தைக் கொண்டு செல்லவும் , நீதிமன்றம் நாடவும், காவல்துறையில் புகார் அளிக்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

திமுக ஆதரவாளர்கள் 2021 க்கான தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளனர் என்றே கருதுகிறேன். முதலில் சமூக ஊடகத்தில் வலுவாக இயங்கும் அனைவரையும் முடக்குவது என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறார்கள். இதை இந்த நிலையிலேயே எதிர்த்து நாம் நிற்கவில்லை என்றால் நிச்சயம் 2021 தேர்தலில் இவர்கள் சொல்வது தான் செய்தி , மக்கள் ஆட்டு மந்தையாக மீண்டும் ஆக்கிவிடுவர்..

பிரபல டீவி நிறுவனம் நடத்தும் விவாத மேடைகளை விட அதிகம் அளவிற்கு நமது வீடியோ மக்களை சென்று சேர்கிறது. இது தான் தற்போதைய உண்மை. இதனால் தான் எந்த போராட்டத்தையும் தூண்டிவிட்டு குளிர்காய முடியவில்லை திமுகவால். தீவிரமாக வேலை செய்கிறது திமுக ஆதரவு வட்டம்.

அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லை என் முயற்சி அனைத்தும் வீணாகும். எங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் திமுக எதிர்ப்பை தீவிரமாக செய்கிறோம் , உங்கள் அனைவரிடமும் வேண்டுவது எங்கள் முயற்சிக்கு ஆதரவு மட்டுமே.

(Facebook Technical உதவி செய்யக் கூடிய நபர்கள் எவரும் உங்கள் நட்பு வட்டதில் இருப்பார்கள் எனில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.)

  • மாரிதாஸ் (Maridhas M)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,821FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...