
மும்பையைச் சேர்ந்தவர் சாகர் என்ற கூலித்தொழிலாளி இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராணி கர்ப்பமாகியுள்ளார். அதனால் வேறு வழியின்றி ராணியைத் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் சாகர்.
சாகரின் இரண்டாவது திருமணத்தால் அவரது முதல் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாகர் ராணியிடம் தற்போது நமக்கு இருக்கும் சூழ்நிலையில் இந்த குழந்தை வேண்டாம் என்று அதனைக் கருக்கலைப்பு செய்து விடு என கூறியுள்ளார்.
அதற்கு ராணி மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.
சம்பவத்தன்று ரயிலில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது இது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சாகர் ராணியை தாக்கி ஒடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் ரயில் மிகவும் மெதுவாக சென்றதால் ராணி சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
இதுகுறித்து ராணி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க போலிஸார் தப்பி ஓடிய சாகரைத் வலைவீசி தேடி வருகின்றனர்.



