அப்துல் கலாம் சொன்ன 2020… அதுதான் ரஜினி கட்சி தொடங்கும் ஆண்டு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
tamilaruvi - 2026

ரஜினி அடுத்த ஆண்டு கட்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் காந்திய மக்கள் இயக்கத் தலைவரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன்.

அப்போது அவரிடம் ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன், ரஜினி அடுத்த ஆண்டு கட்சி துவங்குவார் என்பது மட்டும் உறுதி என்று கூறிவிட்டுச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.