மூஞ்சியில் 2 குத்துவிட்டு ரத்தம் வரவைக்கச் சொன்ன வன்முறை பாதிரி எஸ்ரா சற்குணம் மீது புகார்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

complaint against ezra sargunam - 2026ஹிந்து மதத்திற்கு எதிராக பேசி வன்முறையை தூண்டி வருகிறார் திமுக ஆதரவு பாதிரியார் எஸ்ரா சற்குணம் என்று கூறி, அவர்  மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்…

கிறிஸ்துவ பாதிரியார் எஸ்ரா சற்குணம் திமுக ஆதரவாளராக இருக்கிறார்! இவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்!

ஹிந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம்; அது ஒரு மதமே கிடையாது! இதையெல்லாம் இந்துக்களிடம் எடுத்துக் கூறுங்கள்! அவர்கள் ஏற்கவில்லை என்றால் அவர்கள் முகத்தில் இரண்டு குத்து குத்தி ரத்தம் வருகிற மாதிரி செய்து விடுங்கள்! அதன்பின் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள்!” என்று அவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது!

எனவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது!complaint against ezra sargunam2 - 2026

இந்த மனுவைப் பெற்றுக் கொண்டு, அதற்கான ரசீதும் வழங்கப் பட்டுள்ளது.

complaint against ezra sargunam1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.