இனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்குவது… ம்ஹும் கஷ்டம்தான்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
petrolinbottles - 2026

இனி கேன்களில் போய் பெட்ரோல் வாங்கி வந்து வண்டிக்குப் போடுவது கொஞ்சம் கடினமான வேலையாகத்தான் இருக்கும்.

சில நேரங்களில் வாகனங்களில் பெட்ரோல் தீர்ந்து போய் விட்டால், வேறு வழி?! யாரிடமாவது கடன் கேட்டுப் போவோம்… சில நேரம் ஏதாவது வாட்டர் பாட்டில், அல்லது சிறு கேன்களை எடுத்துக் கொண்டுபோய், அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வந்து, வாகனங்களில் போட்டுக் கொள்வோம்.

கேன்களில் நிரப்பப் படும் போது, பெட்ரோல் வாங்கும் அளவு துல்லியமாகத் தெரியும் என்பதால், சில பெட்ரோல் பங்க்களில் கேன்களில் பெட்ரோல் தர மாட்டார்கள்.

ஆனால், கேன்களில் பெட்ரோல் வாங்கிச் சென்று, சமூக விரோதச் செயல்களிலும், வன்முறைச் சம்பவங்களிலும், பெட்ரோல் குண்டு போடுவதிலும் சிலர் ஈடுபட்டிருப்பதாக அவ்வப்போது குற்றச் செயல்கள் தகவலும் வந்துகொண்டுதான் இருக்கும்.

இந்நிலையில், ஹைதராபாத் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்ட சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்க வேண்டாம் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.