டிச.6: நியாயத் தீர்ப்பு நாள்! : நயன்தாரா ‘பளீச்’!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா தமிழகம் லைஃப் ஸ்டைல்
23 May28 Nayan CSK1 - 2026

பெண்களுக்கு நியாயம் கிடைத்த நாள் டிசம்பர் 6. பெண்கள் அனைவரும் காமுகர்கள் சுடப்பட்ட தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்துக் கொள்ளலாம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்… தெலுங்கானா காவல் அதிகாரிகள் மீதியை நிலைநாட்டியுள்ளனர். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்கு புறம்பான பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளனர்.

பெண்களின் முன்னேற்றம் பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை இந்த நடவடிக்கை சரியாக வழங்கப்பட்ட நீதி என்பதை அறிந்து சொல்வேன். பெண்கள் அனைவரும் காமுகர்கள் சுடப்பட்ட தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்துக் கொள்ளலாம்!

இந்த நடவடிக்கை காட்டுமிராண்டிகளுக்கு இனி பயத்தை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

பெண்களை மதிப்பதே நாயகன் என்பதை ஆண் குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும் எதிர்கால உலகை பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான அன்பான உலக மாற்ற வேண்டியது நம் கடமை.

பிரியங்கா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.