
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Ramayana and Mahabharata are not historical but cooked stories (Myths-Mythologies) – ராமாயணமும் மகாபாரதமும் கற்பனைக் கதைகளே தவிர உண்மையான வரலாறு இல்லை”.
இவ்வாறு பிரசாரம் செய்ததன் பின்னுள்ள சதித் திட்டங்களையும் அவற்றின் தீய விளைவுகளையும் நம் இதிகாசங்களின் சிறப்பையும் பற்றி அறிந்து கொள்வோம்!
அது 2007ம் ஆண்டு. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண்மணி யுபிஏ தலைவராக தேசத்தின் மேல் அதிகாரம் செலுத்திய நாட்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீலங்கா கடல் வழிக்கு குறுக்காக இருப்பதாக சேது சமுத்திரம் ப்ராஜெக்ட் என்ற பெயரில் ஸ்ரீராம சேதுவை உடைத்தெறியும் தீய சாகசம் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நாட்கள். இந்த புனிதத் தலத்தின் மீது இயந்திரங்கள் தாக்கித் தோல்வியடைந்த பின்னணி. இராமாயண இதிகாசத்திற்கு சாட்சியாக நின்ற அந்த புனிதமான ராம சேதுவை காப்பாற்ற வேண்டுமென்று சபதம் எடுத்த சேதபக்தர் சுப்ரமணிய சுவாமி பொதுநல வழக்கு PIL மூலம் சுப்ரீம் கோர்ட்டை நாடிய சுப கணங்கள்.
அதற்கு பதிலடியாக அப்போதைய ஹிந்துவல்லாத அரசாங்கத்தின் தரப்பில் ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா (ASI) செப்டம்பர் 13, 2007 அன்று ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தது.

அதிலிருந்த முக்கிய கருத்துகள் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தியது.
“ராம சேது (ஆடம் பிரிட்ஜ்) மனித நிர்மாணம் என்று காட்டும் அறிவியல் பூர்வமான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று சி. தோர்ஜி என்ற அதிகாரி சுப்ரீம் கோர்ட்டுக்கு இவ்வாறு தெரிவித்தார்…
“வால்மீகி ராமாயணம், துளசிதாஸ் எழுதிய ராமசரித மானஸ் போன்றவற்றை சுப்ரமணிய சுவாமி தன் பெடிஷனில் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் அவை உலகம் ரசிக்கும் இலக்கியங்களாக இருக்கலாமே தவிர, அதில் உள்ள பாத்திரங்கள் கவியின் கற்பனைகளே அன்றி வரலாற்றோடு தொடர்புடைய செய்திகள் அல்ல. ராம, ராவண யுத்தம் நடந்தது என்று கூறுவதற்கும் ராமசேது மனித நிர்மாணம் என்று கூறுவதற்கும் எத்தகைய ஆதாரங்களும் இல்லை”.
அப்போதைய அரசாங்கத்தில் இருந்த ஹிந்து வெறுப்பாளர் கபில் சிபல் இதே விஷயத்தை அடிக்கடி கூறிவந்தார். மக்களின் தீவிரமான கோபத்திற்கு உள்ளான காங்கிராஸ் அரசு அந்த அபிடவிட்டை திரும்பப் பெற்றது.
வந்தேறிகளின் எண்ணங்களுக்கும் காங்கிரஸ் ஆட்சியின் எண்ணங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
புராண இதிகாசங்களை வக்கிரமாக சித்தரிப்பது, அவற்றில் பயன்படும் விஷயங்கள் எதுவும் இல்லை என்ற கருத்தை முயற்சியெடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்வது பிரிட்டிஷ் வந்தேறிகளின் மும்முரமான சதித் திட்டமாக இருந்தது. சர்ச்சுகளின் மூலம் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இழிவு செய்யும் பாடல்களைப் பரப்பினார்கள். கிருஸ்தவ சர்ச்சுகள் “ராமாயணம் ரன்க்கு (வேசித்தனம்)- மகாபாரதம் பொன்க்கு (அபத்தம்)” போன்ற கேவலமான நச்சுப் பாடல்களை கற்றுத் தந்தன.
இந்த துஷ்பிரசரத்தின் தாக்கத்தால் ஆங்கிலக் கல்விக்குப் பழகிப் போனவர்கள் இவற்றை நம்பினார்கள். மாபெரும் இதிகாச நூல்களிடமிருந்து விலகிச் சென்றார்கள். மிகவும் மதிப்பு வாய்ந்த மானுட தர்மங்கள், அறிவியல் கருத்துகள், தர்ம சூட்சுமங்கள் முலானவற்றுக்கு நிலையமான இராமாயணம் மகாபாரதம் என்னும் அமிர்த ரசம் சில தலைமுறைகளுக்கு அறிமுகமே இல்லாமல் போனது. விடுதலைக்குப் பிறகு கூட இதே வழிமுறை செக்யூலரிசம் (ஹிந்துத்துவ எதிர்ப்பு) என்ற பெயரில் தொடர்ந்தது என்பதற்கு ராமசேது சம்பவம் ஒரு உதாரணம்.

ஒரு ஆதரிச மனிதனின் வரலாற்றை நம் முன் நிறுத்திய இதிகாசம் ராமாயணம். இது பாரத தேசத்தின் இதயத் துடிப்பு. மனித இனத்திற்கு கலங்கரை விளக்கம். முன்னேற்றப் பாதையில் நடக்க நினைப்பவர்களுக்கு திசைகாட்டி.
அப்படிப்பட்ட ராமாயணத்திற்கு வெறுப்பு விளக்கங்கள் செய்து அப்போதைய கிறிஸ்தவ மிஷிநரிகள் நூல்களை வெளியிட்டார்கள். அதே வழியைப் பின்பற்றி இடதுசாரித் தலைவர்களும் நஞ்சைப் பரப்பினார்கள்.
“ராமாயணம் மனிதனின் இதயப் பகுதிக்கு புஷ்டியை அளிக்கும் நூல். மகாபாரதம் தலைப் பகுதிக்கு சிறப்பளிக்கக் கூடியது” என்று ஆச்சார்ய புல்லெல ஸ்ரீராமசந்த்ருடு கூறுகிறார்.
பண்டைய வரலாற்றை எடுத்துரைக்கும் நூல்களை இதிகாசம் என்பர். “இதி ஹாபாரம் பரோபதேச: – அஸ்தே அஸ்மின்னிதி இதி ஹஸ:”
ராமாயணம் இதிகாசம் என்று கூறுவதற்கு இந்த புண்ணிய பூமியில் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. ராம பரிவாரம் நடமாடிய பிரதேசங்கள் அகண்ட பாரத தேசமெங்கும் பரவி உள்ளன. ராம ஜென்ம ஸ்தலமான காரணத்திற்காகவே சப்தபுரிகளில் ஒன்றாக அயோத்தி புகழ்பெற்றுள்ளது. அயோத்தியின் வரலாறு பாரதிய கலாச்சாரத்தின் வரலாறு.
அயல்நாட்டு வராலாற்று ஆசிரியர்களும் அயல்நாட்டு யாத்ரீகர்களும் எழுதிய குறிப்புகளில் அயோத்தி பற்றிய வர்ணனைகள் உள்ளன. இராமாயண பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டவர்கள் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளார்கள் என்பதில் வியப்பு எதுவும் இல்லை.
கிறிஸ்தவத்தின் தாக்கம் பரவாத மேல்நாட்டவர் பலர் ராமாயணத்தை வாயாரப் புகழ்துள்ளார்கள்.
“ராமாயணத்தை படித்தவர்களுக்கு ஹோமர் கவி எழுதிய இலியட் நூலுக்கு மூலம் எது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புரிந்துவிடும். ராமாயணத்திலிருந்தே இலியட் இயற்றப்பட்டதென்பது என் நம்பிக்கை” என்கிறார் ஹிபோலிட் பௌஷ்.
ஒரு தந்தைக்கு மகன் மேலிருக்கும் அன்பு, ஒரு மகனுக்கு தந்தையின் மேல் இருக்கும் கௌரவம், ஒரு அண்ணனுக்கு தம்பி மேலுள்ள நம்பிக்கை, ஒரு தம்பிக்கு அண்ணன் மேலுள்ள பாசம்… எல்லாம் ராமாயணம் காட்டுகிறது. ஒரு ஆதரிச மனிதனை இளைஞர்களின் முன் நிறுத்தி, ஒரு உத்தம அரசனை, ஒரு நல்ல மகனை, ஒரு ஆதர்சமான சகோதரனை, கணவனை, ஒரு உத்தம நண்பனை உருவாக்குவதற்கு ராமாயணம் ஊக்கமளிப்பதாக உள்ளது.
மதங்கள் எதுவும் பிறப்பதற்கு முன்பே நிகழ்ந்த வரலாற்றை நூலாக்கிய வால்மீகியின் ராமாயணத்தை ‘மத நூலாக’ முத்திரை குத்தி, செக்யூலரிசம் என்ற பெயரில் இவற்றின் போதனையை விலக்குவதால் சமுதாயத்திற்கு நஷ்டமே ஏற்படுகிறது. கிமு எட்டு, ஏழு நூற்றாண்டுகளில் வால்மீகி படைத்த இந்த ஆதி காவ்யம் மிகச் சரளமான மொழியில் சமஸ்கிருத பாஷையில் அளிக்கப்பட்டுள்ளது.
“உத்தம குடிமக்களை, முக்கியமாக சிறப்பான அரசர்களை உருவாக்குவதற்கு ராமாயணத்தை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்றார் மகாத்மா காந்தி. – ராம ராஜ்ஜியம் காந்திஜி கண்ட கனவு.
பாரதிய இல்லற வாழ்க்கையை சரியாக அளித்து, அதிலுள்ள அங்கத்தினர்கள் எவ்வாறு ஆதரிசமாக நடந்து கொள்ளவேண்டும் என்று வர்ணித்துக் கூறிய ‘உலக காவியம்’ ராமாயணம்.
தாய் தந்தையர் மீது ராமனுக்குள்ள பக்தி, பரத, லக்ஷ்மணருடைய சகோதரப் பாசம், ஹனுமனுகுள்ள ஸ்வாமிபக்தி, சீதம்மாவின் பதிவிரதை வைபவம், சபரி, குகன் ஆகியோரின் பக்தி, விஸ்வாமித்திரரின் சிஷ்ய வாத்சல்யம், ஜடாயுவின் நன்றி உணர்வு… இவ்வாறு உயர்ந்த குணங்களை விளக்கும் ராமாயணத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். தன்னம்பிக்கையையும் சுயகௌரவத்தையும் வளர்க்கும் ஔஷதம் ராமாயணம்.
மத மாற்றங்களை கட்டுப்படுத்தும் கோட்டை ராமாயணம். வந்தேறி வாரிசுகளின் சதித் திட்டங்களை முறியடிக்கவேண்டும். ராமாயணத்தின் மேல் விஷத்தைக் கக்குபவர்களைத் துரத்த வேண்டும்.
(நன்றி- ருஷிபீடம், மே, 2019)