வெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் வணிகம்
onion - 2026

உள்நாட்டு சந்தைகளில் உயா்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்திருந்தது. இதில் சுமார் 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது.

சனிக்கிழமை காலை துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியான நிலையில், ஒரு மணி நேரத்தில் அனைத்து வெங்காயமும் விற்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் இன்று வந்தடைந்தது.

ஆனால், வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் வெங்காயத்தின் நிறம் கருப்பாக இருப்பதால், மக்கள் அதனை வாங்க தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

பார்க்க கருப்பாக இருப்பதால், அதனை வாங்கி உண்டால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.