
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பேசிய பல அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என பேசி வருகிறார்கள்
இந்நிலையில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறியுள்ளார்
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.
இதனால் ஈழத்தமிழர்களை இலங்கையில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற சிங்கள அரசின் நோக்கம் நிறைவேறி விடும்.
அதற்கு நாம் ஒருபோதும் துணை போகக்கூடாது என்றும் கூறிய நெடுமாறன் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
அப்படி வழங்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயவிருப்பத்துக்கேற்ப இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் வாழ வழிவகை செய்யும் என்றும் கூறியுள்ளார்
மேலும் இலங்கை தமிழர்களுக்கு தற்போது குடியுரிமையை கொடுப்பதைவிட வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தேவையானவற்றை தமிழக மற்றும் இந்திய அரசு செய்ய வேண்டும்.
குறிப்பாக இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
இலங்கை தமிழர்களுக்கான சரியான தேவையை நெடுமாறன் நெடுமாறன் குறிப்பிட்டிருப்பதாக நெட்டிசன்கள் நெடுமாறனை பாராட்டி வருகின்றனா்.



