சென்னையை சேர்ந்த இளம்பெண் மிஸ் தமிழ்நாடாகத் தேர்வு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
ms chennai - 2026

மிஸ் தமிழ்நாடு 2020 என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி வென்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 13-வது மிஸ் தமிழ்நாடு போட்டியில் பல சுற்றுகளை கடந்து, இறுதி சுற்றுக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ram walk - 2026
கோப்பு படம்

இந்நிகழ்ச்சிக்கு நடிகை யாஷிகா ஆனந்த், உபாசனா ஆர்.சி. ஹரினி, சைதன்யா ராவ், ஜெயஸ்ரீ ஈஸ்வர் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர். நவநாகரீக உடையணிந்திருந்த இளம்பெண்கள் மேடையில் ரேம்ப் வாக்கில் ஈடுபட்டனர்.

மூன்று சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் மிஸ் தமிழ்நாடு 2020 ஆக தீப்தி முடிசூட்டப்பட்டார். அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.