இன்னொரு திருமணத்திற்கு அடி போட்ட கணவன்! விரட்டி விரட்டி கொன்ற மனைவி!

Published:

vetti kolai - 2026

கோயில்பட்டியில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்த கணவரை, மனைவி அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(38). தனியார் மில் ஊழியர். இவருக்கு, உமா மகேஸ்வரி(30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே பிரபு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபுவுக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்திருந்த பிரபு, உமாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும், தான் காதலிக்கும் பெண்ணை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி, வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயமடைந்த, அவர் அலறிக்கொண்டு சாலையில் ஓடினார். அப்போது தீடீரென சாலையில் சரிந்துவிழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கோயில்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உமாமகேஸ்வரியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img