பிரதமர் மீது ஊழல் புகார்கள் எதுவுமில்லை!

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi 2 - 2026

பிரதமர் மோடி மீது எந்த விதமான ஊழல் புகார்களும் லோக்பால் அமைப்புக்கு இதுவரை வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உயர் பதவிகளை வகிப்போர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் எனும் அமைப்பு தொடங்கப் பட்டு, கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் லோக்பாலுக்கு 1190 புகார்கள் வந்ததாகவும் அவற்றில் 1120 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்தோ, மத்திய அமைச்சர்கள் குறித்தோ லோக்பாலுக்கு இதுவரை எந்த விதமான ஊழல் புகார்களும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.