பிரதமர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷம் போட்டால்..உயிரோடு புதைப்பேன்! உபி அமைச்சர்!

அடடே... அப்படியா? இந்தியா
ragurajsingh - 2026

குடியுரிமைச் சட்ட ஆதரவுப் பேரணி அலிகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியதாவது,

பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினால், நான் உங்களை உயிருடன் புதைப்பேன் என்று சிஏஏவுக்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிட்டு தெரிவித்தார்.

சிஏஏ-வை எதிர்க்கும் இந்த ஒரு சதவீதத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். நமது வரியில்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் நமக்கு எதிராக ‘ஒழிக’ கோஷங்களை எழுப்புகிறார்கள். இந்த நாடு அனைத்து மதங்களுக்கும் சொந்தமானது, ஆனால் இவ்வாறு எதிர்ப்பு கோஷமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.