முரசொலி வச்சிருந்தா ‘முட்டாள்’னு அவர் எங்கயும் சொல்லலியே??

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
rajini venkaiah gurumurthi - 2026

‘மு’னவுக்கு ‘மு’னா வருதுன்னு கவிஞர்கள் கலைஞர்கள் பாணியில யோசிச்சி முரசொலி வச்சிருந்தா முட்டாள்னு ரஜினி எங்கயும் சொல்லலியே?? ஏன் இந்த டீம்காகாரங்கள்லாம் வாண்டடா வண்டில ஏறுராங்க…?

இப்படி கிண்டல் செய்கிறார்கள் டிவிட்டர் பக்கங்களில்! காரணம், நேற்றைய துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழாவில்- ஒருவன் கையில் முரசொலி பத்திரிக்கை வைத்திருந்தால்.. திமுக காரன் னு சொல்லிடலாம்.. ஒருவன் கையில் துக்ளக் வைத்திருந்தால்.. அறிவாளி னு சொல்லிடலாம்… என்று ரஜினி பேசியதுதான்!

ரஜினியின் இந்தப் பேச்சு இன்று டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். மாறி மாறி ஒருவருக்கொருவர் குறைசொல்லியும் திட்டியும் கூட கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.