December 3, 2021, 10:29 am
More

  ரஜினி, கமல், லால்… எந்த அப்பா எப்படி? உடைத்து சொன்ன நிவேதா தாமஸ்!

  nivetha thamas - 1

  பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் என்ற கேரக்டரில் பாசக்கார அப்பாவாக நடித்த கமல் மகளாக நடித்து அப்பா செல்லமாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நிவேதா தாமஸ்
  தர்பார் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் போலீசாக வரும் ரஜினியின் மகளாக நடித்து. தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்ஸ்’ மகள் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

  அவர் பகிர்ந்து கொண்டவை
  ‘பாபநாசம்’ படத்துக்கு பின் இடைவெளி ஏன்? என்ற கேள்விக்கு
  தமிழில் நான் கதை கேட்பதில்லை என்று சொல்ல முடியாது. தெலுங்கில் நிறைய படங்கள் ஒரே நேரத்தில் வந்தது. அதற்கு முன் கல்லுாரி தேர்வில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது.

  அதனால் கொஞ்சம் இடைவெளி எடுத்தேன். இப்போது ‘தர்பார்’ மூலம் திரும்ப வந்தாச்சு. இனி தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்.* படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பது எப்படி ?நான் நடிக்கப் போகும் படத்தில் எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கு. என்ன சேலஞ்ச் இருக்குனு தான் பார்ப்பேன்.

  rajini nivetha - 2

  தெலுங்கு படங்களில் ‘ஜென்டில்மேன்’க்கு பின் வந்த கதைகள் எல்லாம் நல்ல கதைகளா அமைந்தது. தமிழில் நல்ல கதைகளுக்காக நான் காத்திட்டு இருக்கேன்.* என்றார்

  படப்பிடிப்பு தளத்தில் உங்க அனுபவம் சொல்லுங்க? என்று கேட்டதற்கு ‘பாபநாசம்’ சூட்டிங்கில் கமல் எனக்கு நிஜமாவே அப்பாவா மாறிட்டாரு.

  ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் போஸ்டர் ஸ்டில் எடுக்கும் போது ரஜினியை முதல் முறை பார்த்தேன். இந்த படத்தில் நம்ம அப்பா இப்படி தான் இருப்பாருன்னு நினைச்சுகிட்டேன். முதல் காட்சியை ஒரே டேக்கில் முடித்தோம்.*

  தர்பார் படம் பற்றி சொல்லுங்க? என்றதற்கு

  ரஜினி போலீஸ் ரோலில் ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்காரு. இயக்குனர் முருகதாஸ் நல்ல கதை அமைத்து இருக்கிறார்.

  திரில்லர், எமோஷனல் கலந்த கதை. படம் முழுக்க மும்பையில் சூட் பண்ணி இருக்காங்க. நயன்தாரா, சுனில் ஷெட்டின்னு பெரிய டீம் நடிச்சிருக்காங்க. அதில் நானும் இருக்கேன் என்பது பெருமை.* தர்பார் படப்பிடிப்பு எப்படி இருந்துச்சு ?முதல்நாள் படப்பிடிப்பு ஜாலியா ஆரம்பித்தது.

  யோகி பாபு, ரஜினி எல்லாம் டயலாக் பேசி பயிற்சி எடுப்பதை கவனிச்சு பார்த்தேன். ஆடியோ லான்ச்சில் வந்த போது நம்ம கூட அப்பாவா நடித்த ரஜினியை மக்கள் எவ்வளவு கொண்டாடுறாங்கனு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.*

  ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்குனிங்களா?கடைசி நாள் படப்பிடிப்பில் தான் அவர் கூட நான் போட்டோ எடுத்து, ஆட்டோகிராப் வாங்கினேன். அன்புடன் ரஜினிகாந்த் என்று கையெழுத்து போட்டு கொடுத்தார். என் தம்பியையும் கூட்டிட்டு போயிருந்தேன்.

  ரஜினியை பார்த்த அவன் அப்படியே உறைந்து போயிட்டான்.* தர்பார் படத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயம் ?தர்பார் படத்தை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு மனிதர்கள் கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

  காலை சன்ரைஸ் ஷூட்டிங் இருந்தால் 4:30 மணிக்கே கேரவன் ரெடியாக நிற்கும். இங்கு எல்லாருக்குமே உழைப்பு ஒன்று தான். யாராக இருந்தாலும் ஒரே மாதிரி ‘டிரீட்’ பண்ணனும். இதை தர்பார் படத்தின் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.*

  மோகன்லால், கமல், ரஜினிக்கு மகளா நடிச்சது குறித்து?

  இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்… மோகன்லால் கிரேஸ், கமல் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட், ரஜினி செல்லமான அப்பா…என்றார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-