பட்டம் விட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா! வைரல் வீடியோ!

பொது தகவல்கள்
amithsha - 2026

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டம் விட்டு கொண்டாடினார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் மற்றும் வடமாநிலங்களில் பொங்கல் பண்டிகையானது சங்கராந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஜராத்தில் உட்டாரயான் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பட்டம் விடும் திருவிழா அந்த பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பட்டம் விட்டு கொண்டாடி வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பட்டம் விட்டு இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடினார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டம் விடும் வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.