படகு கவிழ்ந்து விபத்து ! லிபியாவில் இருந்து ஐரோப்பா வந்த அகதிகள்… பரிதாபம் !

Published:

boat - 2026வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவின் அல் கோம்ஸ் நகரில் இருந்து இரண்டு படகுகளில் 300-க்கும் மேற்பட்ட  அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்தனர். இவர்களுடைய படகுகள் தலைநகர் திரிப்போலியிலிருந்து கிழக்கில் 120 கி.மீ தொலைவில் மத்திய தரைகடல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஇதனால் படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் விழுந்து விட்டனர். அப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்த லீபிய நாட்டு கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கடலில் சிக்கிய 150 பேரை மீனவர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

எனினும், இந்த விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களது உடலை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related articles

Recent articles

spot_img