கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சென்னையில் ஒருவர் அனுமதி! 242 பேர் தனிமைப்படுத்தல்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சென்னை லைஃப் ஸ்டைல்
c vijayabhaskar - 2026

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும், சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 242 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சீனாவில் இருந்து திரும்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதிப்பதற்காக, அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

இதனிடையே, சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. #CoronaVirus #Medical #China

Coronavirus causes symptoms and treatment - 2026

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர் என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்! கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் இருந்து இதுவரை 242 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்றும், 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம், அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்..

திருவண்ணாமலையில் கொரோனோ வைரஸ் குறித்து பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.