
அராஜகத்தின் உச்சம்! திமுகவினரும் இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் ! திமுக கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம் – என்று சமூகத் தளங்களில் வைரலாகின.
இதற்குக் காரணமாகக் கூறப் படுவது – நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்தனராம். இதைத் தொடர்ந்து சாதி, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது.

சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர்கள்… அது செல்வராஜ் தொடங்கி வில்சன் வரை என, கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன! இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அவ்வப்போது பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் கிளப்பி வருகின்றது.
நெல்லையில் மற்றுமொரு அதிர்ச்சிச் சம்பவம் கடந்த இரு நாட்களாக பிரச்னையைக் கிளப்பி வருகிறது.
பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும்.. இந்துக்கள் புகார்கூறுகின்றனர்.

நேற்று இந்த அராஜகத்தின் உச்சமாக கடையைப் பூட்டு போட்டு பூட்டி, வெளியூரில் இருந்து சில அடிப்படைவாதிகளை வரவழைத்து மிரட்டல் விடுத்தனராம். அந்தப் பகுதியில் வியாபாரம் செய்பவர்களில் திமுக.,வைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்ற நிலையில், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்னை என்றால் எங்களுக்காகத்தான் ஓடி வரும்.. எனவே நீங்கள் கடையை விட்டுவிட்டு ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுத்துள்ளது அந்த கும்பல்.
கட்சியாவது மண்ணாங்கட்டியாவது… சுயமரியாதையும் தன்மானமுமே முக்கியம் எனக் கூறி அங்கு கடை வைத்திருந்த கடையின் உரிமையாளர்களும், அவர்கள் குடும்பத்தினரும், கட்சி வித்தியாசம் பாராமல் இந்துக்கள் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அந்த கும்பல் நினைக்காத சூழலில், மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாதி வேறுபாடு இன்றி ஒன்று சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டிருக்கிறார்கள்!
இனி நெல்லையில் எந்த ஒரு இஸ்லாமியர் கடைகளிலும் பொருள்களை வாங்க மாட்டோம்! எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் என்றெல்லாம் இந்தப் போராட்டத்தின் போது கோஷம் எழுப்பப் பட்டது.
- நெல்லையான்