புத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்! வைரலாகும் வீடியோஸ்!

Published:

boy singing chandrababu song - 2026

கடந்த இருநாட்களாக ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிறுவன் சந்திரபாபுவின் பாடலை அதே அச்சு அசல் சாயலில் ஆடியபடியே… தாளத்துக்கு இடைவெளி விட்டு, பாடுகிறான்.

பள்ளியில் ஆசிரியர் ஒருவரால் மொபைல் போனில் எடுக்கப்பட்டு வெளியான வீடியோ போல் தோன்றும் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. யார் இந்தச் சிறுவன் என்று இப்போது பலருக்கும் கேள்விக் கணைகள் தொக்கி நிற்கின்றன. காரணம் அவ்வளவு தத்ரூபமாக சந்திரபாபுவின் குரலை காட்சிப் படுத்தியிருக்கிறான்.

இதனிடையே இந்தச் சிறுவனின் குரலுக்கு ரசிகர்களும் முளைத்து விட்டார்கள். ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோவுக்கு, ஒரு பெண்மணி இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்….

School ல சந்திரபாபு பாடல் படினதே பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துது தம்பி…… நீ பாடனுது கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா செல்லம்…… i love d chellam……next மனோ நீதண்டா செல்லம்

இப்படி பலரும் கருத்துகளைப் பகிரவே, இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. கண்ணான கண்ணே என்று இந்தச் சிறுவன் பாடும் பாடல் மயக்கும் விதமாய் இருக்கிறது என்று கருத்துகள் தொடர்ந்தன.

பொதுவாக, டிவி.,க்களின் ரியாலிடி ஷோக்களில் இது போன்று சிறுவர், சிறுமியரைப் பாடச் செய்து, பரிசுகளை குறியாக வைத்து இயங்குவார்கள் சிலர். வேறு சிலர் தங்கள் குழந்தைகளின் திறமை உலகுக்குத் தெரியவரட்டும் என்று இது போன்ற வீடியோக்களை வெளியிடுவார்கள். இப்போது இந்தச் சிறுவனின் வீடியோவும் திறமையை உலகம் உணர்ந்து அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img