திருச்சி தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் தாயார் சுப்புலட்சுமி ராகவன் காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
rrgopaljimother - 2026

தினமலர் பங்குதாரர் அமரர் ஆர்.ராகவனின் மனைவி சுப்புலட்சுமி (77) இன்று காலமானார்.

தினமலர் திருச்சி, வேலுார் பதிப்புகளின் எடிட்டர் முனைவர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயாரான சுப்புலட்சுமி, இன்று மாலை 4.30 மணிக்கு திருச்சியில் காலமானார்.

நாகர்கோவிலில் சுப்பிரமணி ஐயர், வேங்கடலட்சுமி தம்பதிக்கு 1943ல் பிறந்தவர், சுப்புலட்சுமி. அவருக்கு 4 சகோதரர்கள், 3 சகோதரிகள். தினமலர் பங்குதாரர் ஆர். ராகவனை 1964ல் மணந்தார். அவர்களுக்கு 2 மகன்கள். திருச்சியில் வசித்துவந்த அவர், இன்று மதியம் இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச் சடங்குகள், நாளை 28ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு திருச்சி கன்டோன்மென்ட், பேர்ட்ஸ் ரோடு இல்லத்தில் நடைபெறும். இறுதி ஊர்வலம் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

மறைந்த சுப்புலட்சுமி அம்மையாரின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.