
தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த சூழல் நிலவியது. இதை அடுத்து, அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
பொதுவாக இது கோடைக்காலம், பங்குனி சித்திரையில் வறட்சி நிலவும் என்ற நிலையில், திடீரென மழை பெய்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அருவிகளில் குளிக்கத் தக்க அளவில் மிதமாக நீர் விழுவதால், குழந்தைகள், சிறுவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.



