ஹைதராபாத்தில் கரோனா அச்சம்: பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொன்ன ஐடி கம்பெனி!

Published:

corona virus - 2026

ஹைதராபாத் ஐடி., நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி ஊழியர்களுக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் அதற்குக் காரணம் கொரோனா வைரஸ்!

பெங்களூரில் பணிபுரியும் ஹைதராபாத் மென்பொருள் ஊழியருக்கு கரோனா நோய் அறிகுறி அடையாளம் கண்ட பின்னணியில் அவர் பணிபுரியும் கம்பெனி எச்சரிக்கை அடைந்து தன் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாதில் கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட  இளைஞர் வேலை செய்யும் பெங்களூரு சாஃப்ட்வேர் கம்பெனி எச்சரிக்கை அடைந்து கம்பெனியில் பணிபுரியும் 24 ஊழியர்களையும் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படியாக உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவர்களை சந்திக்கும்படி குறிப்பிட்டுள்ளது.

கரோனா நோய் தாக்கப்பட்டவர் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணித்த பஸ்ஸில் 12 பேர் கர்நாடகா வைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் மீண்டும் பெங்களூரு சென்றடைந்தார்கள் என்றும் கர்நாடகா சுகாதார அமைச்சர் கே சுதாகர் கூறினார்.

இந்த பின்னணியில் அவர்களின் விவரங்களை டிராக் செய்து மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். அவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் கரோனா தாக்கப்பட்ட ஒருவரோடு தொடர்பு  ஆகியிருப்பதாகவும் இன்னும் பயணிகளில்  சிலரை அடையாளம் கண்டு அவர்களின் ரத்தப் பரிசோதனையை நடத்தியதாகவும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

குறிப்பிட்ட சாப்ட்வேர் கம்பெனி இன்ஜினியர் வந்த விமானத்தில் அவருக்கு முன்னாலும் பின்னாலும் பக்கத்திலும் அமர்ந்திருந்த 15 பேரை அடையாளம் கண்டதாகக் கூறினார். கர்நாடகாவில் கரோனா வைரஸ் செய்தி பரபரப்பை ஏற்படுத்தும் இந்தநிலையில் செவ்வாயன்று மார்ச் 3,  அமைச்சர் செய்தியாளர்களோடு பேசினார்.

சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூரில் ஒரு வாடகை அறையில் இன்னொரு மனிதரோடு சேர்ந்து வசிக்கிறார் என்று அமைச்சர் தெரிவித்தார். அவருடைய  அறைவாசியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகள் நடத்தியதாக கூறினார்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் மொத்தம் 92 ப்ளாட்டுகளில் உள்ளன என்றும் அந்தந்த பிளாட்களில் வசிப்பவர்கள் அனைவரையும் ஸ்கிரீனிங் செய்கிறோம் என்றும் கூறினார்.

karona - 2026

செகந்திராபாத்தில் உள்ள மகேந்திராஹில்ஸுக்கு சேர்ந்த 24 வயது இளைஞர் ஹாங்காங் தொடர்புடைய சாஃப்ட்வேர் கம்பெனியில் ஊழியராக பெங்களூருவில் பணிபுரிகிறார். அவர் பிப்ரவரி 19 ஆபீஸ் பணியாக துபாய் சென்றார்.

அங்கிருந்து இருபதாம் தேதி பெங்களூருக்கு திரும்பினார். பெங்களூருவில் தன்  அலுவலகத்தில் இரண்டு நாட்களில் பணிபுரிந்த பின்னர் அவர் 22 அன்று ஹைதராபாத்  சேர்ந்தார் .

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

5 நாட்களாக ஹைதராபாதில் மகேந்திராஹில்ஸ் பகுதியில் தன் வீட்டில் வசிக்கிறார். இப்போது அவரோடு தொடர்பு ஆனதாக  மொத்தம் 80 பேர் விவரங்களை டிராக் செய்துள்ளதாக தெலங்காணா சுகாதார  அமைச்சர் ஈடல ராஜேந்தர் கூறினார்.

நோய் தாக்கப்பட்டவருடையது கூட்டுக் குடும்பம் என்றும் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் நிர்வகித்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் 5 நாட்களாக மகேந்திரா ஹில்ஸிலிருக்கும் பின்னணியில் உள்ளூர்வாசிகள் எச்சரிக்கை அடைந்தனர். அங்கிருந்த சுற்றுப்புறத்தில் ஜிஹெச்எம்சி ஊழியர் வைரஸை போக்கும் ரசாயனங்களை தெளித்தார்.

உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சந்தேகப்பட்ட நோய் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுகவேண்டும் ஆக குறிப்பிட்டுள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img