December 11, 2025, 6:08 PM
26.2 C
Chennai

தூக்கம் இன்மையா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

sleep 4 - 2025

படுத்தவுடன் தூங்கி விட்டால் உண்மையில் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சுமார் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். அவ்வாறு தூங்கி எழும் போது மனசும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

உள் மூச்சு வெளி மூச்சு ஆகியன நடக்கும் போது நமது மூளை அமைதியாக இருக்கும். மூக்கின் வழியே மூச்சை 4 நிமிடங்கள் உள் இழுத்து 7 அல்லது 8 நொடிகள் மூச்சை உள் நிறுத்தி பின்னர் வாய் வழியே 8 நொடிகள் மூச்சை விடவேண்டும். இதனை செய்யும் போது, ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும்.

தூக்கம் வரவில்லை என்பதற்கு ஆத்திரமோ, கோபமோ அடைய கூடாது. முடிந்தளவு மூச்சை இழுத்து விட வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். முக்கியமாக அரோமா பாத ரிப்லக்ஸாலஜி மற்றும் தூக்கத்திற்கான சிறப்பு அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டி சிகிச்சை மேற்கொண்டால் மிக எளிதாக தூக்கமின்மையினை குணப்படுத்தலாம்.

பிடித்த இசையை இரவில் கேட்கலாம். மனதிலுள்ள நல்ல விஷயங்களை அசைப்போட்டு எதிர்மறை எண்ணங்களை தூர போடவேண்டும். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கலந்து மனம் விட்டு சிரித்து பேசுவதினாலும் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதாலும் மனம் லேசாகி நன்றாக தூக்கம் வர வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும்.

பாதுகாப்பு முறை: தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும்.

தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும்.

படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும். இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும். மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும்.

புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

ரெசிபி

ஓட்ஸ் சூப்:
ஒரு கப் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், வெண்ணெய் 2 டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், பச்சை பிரியாணி இலை சிறிதளவு, பால் இரண்டு கப், பூண்டு இரண்டு பல் எடுத்துக் கொள்ளவும்.

சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறிய ஒரு கப் ஓட்சை மசித்துக் கொள்ளவும். அதில் இரண்டு கப் பால் ஊற்றி கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, பட்டை, பிரியாணி இலை, குடைமிளகாய் ஆகியவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வேக விடவும். ஓட்ஸ் உடன் சேர்த்து இறுதியில் வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக அருந்தலாம். ஓட்ஸ் சேர்ப்பதால் செரோட்டின் சுரப்பு அதிகரிக்கும்.

முருங்கைக்காய் பிரைடு ரைஸ்:
முருங்கைக்காய்களை வேக வைத்து அதன் சதை பகுதியை ஒரு கப் அளவுக்கு சேகரிக்கவும். இரண்டு வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி சேர்த்து 1 கப் எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன், மிக்சியில் அடித்த தக்காளி கால்கப், ஒரு கப் பாசுமதி அரிசி எடுத்துக் கொள்ளவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு, புதினா கொத்தமல்லி ஒரு கப், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், நெய் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.

மசாலாப் பொருட்களை வதக்கிய பின்னர் காய்கறிகள் சேர்த்து வதக்கி, அரிசியுடன் இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து குக்கரில் இரண்டு விசில் விடவும். கடைசியில் முருங்கைக்காய் விழுது, புதினா, கொத்தமல்லி, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

கிரீம் புரூட் சாலட்:
புளிக்காத தயிர் ஒரு கப் எடுத்து துணியில் கட்டி இரண்டு மணி நேரம் தொங்க விடவும். தண்ணீர் வடிந்து கிரீம் மட்டும் மிச்சம் இருக்கும்.

ஆப்பிள், அன்னாசி, திராட்சை, பப்பாளி, மாதுளை, கொய்யா ஆகியவற்றை பொடியாக நறுக்கி இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். இதில் கால் கப் தேன் சேர்க்கவும். மிளகுத்தூள் அரை டீஸ்பூன், தயிரில் இருந்து சேகரித்த கிரீம் சேர்த்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடலாம். மினரல், வைட்டமின் சத்துக்கள் கிடைக்கிறது.

டயட்

பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கவும். அடிக்கடி குளிர்பானம் குடிக்கும் பழக்கத்தை கைவிடவும். அடிக்கடி காபி குடிப்பதை நிறுத்தவும். பழங்களை அப்படியே சாப்பிடலாம்.

மசாலா உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும். இரவு நேரத்தில் அரிசி மற்றும் ரவை, ஆப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

இரவில் தினமும் பால் சேர்க்கலாம். ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சை ஆகிய ஐந்து பழங்களும் தூக்கத்துக்கு நல்லது. இவற்றை பழக்கலவை செய்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தூக்கம் பெறலாம்.

தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை கட்டாயம் இருக்க வேண்டும். முளைகட்டிய பயறு வகை ஒன்றும் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்காய்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும். தூக்கம் வராமல் தவிக்கும் வயதானவர்கள் உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்க்கவும்.

கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய உணவுகளை காலை நேரத்தில் உட்கொள்ளலாம். இத்துடன் ஏதாவது ஒரு காய் பொரியல் சேர்த்துக் கொள்ளும் போது நார்ச்சத்துடன் மற்ற வைட்டமின் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் தூக்கம் இன்மை பிரச்னையை விரட்டலாம்

வீட்டு வைத்தியம்

வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்.

ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.

முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.

மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.

மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

சப்போட்டா பழத்தை தினம் பகல் பொழுதில் சாப்பிட்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Topics

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

Entertainment News

Popular Categories