கொரோனா… தவிர்க்க பச்சைக் கற்பூரம் ஒரு முக்கிய கலவை!

Published:

mumbai masks - 2026

இன்று காலை மேதகு தெலுங்கானா ஆளுநர் Tamilisai Soundararajan டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் அவர்களின், ‘கொரோனா தொற்றுக்கு கற்பூரம் ஒரு முக்கிய கலவையாக பயன்படும்’ ட்வீட் ஒன்றை படித்தேன். வழக்கம் போலவே சில அதிமேதாவிகள், முற்போக்குகள், மருத்துவ அரசியல் விமர்சகர்கள், இடது சாரிகள் அவரின் பதிவை விமர்சித்து வருகின்றனர்.

அவர் பதிவில் இருந்த உறுதியால், ஒரு தேடுதலை நான் மேற்கொண்டேன். வியக்கத்தக்க பல உண்மைகளை காண முடிந்தது. நம் முன்னோர்கள் இறை நம்பிக்கை என்ற பெயரில், நம்மை காத்து கொள்வதற்கு பல்வேறு அறிவியல் அதிசயங்களை நமக்கு அளித்திருக்கிறார்கள் என்று வியப்படைந்தேன்.

கற்பூரம் என்பது ஹிந்து மதத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நம்மிடையே உள்ள நோய் கிருமிகளை அழிக்க வல்லது என்பதை நாம் அறிவோமா? நம் வீடுகளில், கோவில்களில், பூஜைகளில் என கற்பூரம் நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது.

ஹிந்து அறநிலையத்துறையானது, கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை தடை செய்துள்ளது. ஆனால்,மக்கள் திறந்த வெளிகளில் கற்பூரத்தைப் பயன்படுத்துகின்றனர். தி.க போன்ற நாத்திகம் பேசுவோர் மூட நம்பிக்கை என கூறியதும்,அதனடிப்படையில் வந்த அரசுகள் இதை தடை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

போலியான கற்பூரம் கலந்து விடுவதால் மாசு ஏற்படுகிறது, அதனாலேயே தடை செய்தோம் என்று சொல்கிறார்கள். போலியை அழிப்பதை விட்டு,அசலையும் ஒழித்த கதையாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த வந்த வழக்கத்தை ஒழித்ததன் பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம்.

கற்பூரம் நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் படைத்தது. கற்பூரத்தை எரித்தவுடன் அதன் புகை காற்றில் கரைகிறது. பரவியிருக்கும் நோய் கிருமிகளை அது அழித்து விடுகிறது. கற்பூரம் குறித்த பல்வேறு அரிய மருத்துவ குணங்கள் குறித்த தகவல்கள் உள்ளன.

கற்பூரம் மருந்துகளில் ஒரு கலவையாக உபயோகப்படுத்த படுகிறது. ஆனால் அதை எப்படி மருந்தாக எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த அளவிற்கு உபயோகிக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் விக்ஸ், டைகர் பாம் ஆகியவை கற்பூரம் அடங்கியவை (5%) குழந்தைகளுக்கு இவை ஒவ்வாமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் இதை அதிகமாகவும் பயன்படுத்த கூடாது என்பது எச்சரிக்கை. மிகச் சிறிய அளவில் உள்ளூர் மயக்க மருந்தாகவும், நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருளாகவும் செயல்படுகிறது. அரிப்பு-எதிர்ப்பு ஜெல்கள் மற்றும் குளிச்சியான ஜெல்கள் கற்பூரத்தை முக்கிய இடுபொருளாகக் கொண்டவையாக உள்ளன.

கற்பூரம் ஒரு செயல் திறனுள்ள உள்ளீடாக நீராவி போன்ற நீர்ம-நீராவி பொருட்களிலுள்ளது. அது விக்ஸ் வேப்பரப் போன்றவற்றில் பயனுள்ள இருமல் அடக்கியாக உள்ளது. அது வாய் வழியாகக் கூடச் சிறு இருதய நோய் அறிகுறிகளிலும், மயக்கநிலைகளிலும் மருந்தாக சிறு அளவுகளில் (50 மில்லிகிராம்) அளிக்கப்படுகிறது.

இதை ஹிந்து மதத்தின் மேன்மைகளை எடுத்து சொல்வதற்கான கட்டு கதை என்று கம்யூனிஸ்ட்டுகளும், இறை மறுப்பாளர்களும், தி க வினரும் சொல்வார்களே யானால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

கனடா நாட்டின் டொராண்டோ நகரை சேர்ந்த டாக்டர் தௌசீஃப் அகமது கான் என்பவர் தன் கட்டுரையில், கற்பூரத்தின் அருங்குணங்கள் குறித்து திருக்குரானிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக மேற்கோள் காட்டுகிறார். கற்பூரம் எரிச்சலை அகற்றி குளுமையை, நிவாரணத்தை, நிதானத்தை அளிக்கிறது என்று திருக்குரான் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மூத்த மகள் ஹள்ரத் ஜைனப் (ரலி) அவர்களின் இறுதி சடங்கின் போது, அவரது உடலில் கற்பூரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறுகிறார்.

(குறிப்பு:Sahih al-Bukhari) மேலும், குறிப்பாக அகமதியா இஸ்லாமிய பிரிவின் தலைவர் ஹஸ்ரத் மீர்ஸா குலாம் அகமது அவர்கள், “இஸ்லாமியர்கள், இறந்தவர்களின் உடல்களில் கற்பூரத்தை கலப்பது ஏனெனில், கற்பூரம், சடலங்களில் இருந்து தொற்றுநோயை பரப்பும் நுண்ணுயிரிகளை அழிக்க வல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

மேலும், “நவீன ஆய்வுகள் தொற்று நோய்களான பிளேக், மலேரியா போன்ற பரவலை கட்டுப்படுத்த கற்பூரம் உதவியது என்பதற்கான சான்றுகள் உள்ளன” என்று கூறியிருக்கிறார். அரபு மொழியில் கற்பூரத்திற்கு அடக்குவது அல்லது மறைப்பது என்றே பொருள் படும்.

ஜெர்மனியின் ஹானிமன்(C.F.S. Hahnemann) என்பவர் தான் ஹோமியோபதி மருத்துவத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். இதன் படி உடலில் இயங்கும் இயற்கைச் சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது.

ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. காலராவை தடுக்கும் மிக பெரிய காரணி கற்பூரம். காலராவை கற்பூரம் மட்டுமே தடுக்க முடியும் என்றார். மற்ற எதை காட்டிலும் கற்பூரத்திலிருந்து வெளிப்படும் புகை அல்லது ஆவி கண்ணுக்கு தெரியாத உயிரிகளை அழிக்கும் என்றார்.

மனித குலத்தையே அழிக்கக்கூடிய யாராலும் புரிந்து கொள்ள முடியாத, கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரிகள், மனிதர்களின் உடலிலோ, தலைமுடியிலோ, உடைகளிலோ ஒட்டிக்கொண்டு, அதன் பின் அவர்களுக்கு தெரியாமலே மற்றவர்களுக்கு பரவும் கொடுமையான விஷ கிருமிகளை அழிக்க வல்லது கற்பூரம் என்றார்.

குறிப்பு : கற்பூரத்தை மேன்மையை உணர்த்துவதற்கே இந்த பதிவு. எந்த நோயானாலும் உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதே சிறந்தது. பொது அறிவிற்காகவே இந்த கட்டுரை. தானாக யாரும் கற்பூரத்தையோ, கற்பூரத்தை கலவையாகவோ நோய்க்கு எதிராக பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்க கூடும். மருத்துவர்களின் பரிந்துரை படியே சிகிச்சை எடுத்து கொள்வது கட்டாயம்.

மேதகு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் Tamilisai Soundararajan அவர்களின் உறுதியும், நம்பிக்கையும் கொரோனா தொற்றை எதிர்க்க ஒரு புதிய ஆயுதத்தை கொடுத்துள்ளது.

  • நாராயணன் திருப்பதி.

Related articles

Recent articles

spot_img