
இளைஞரின் கிடார் வாசிப்புக்கு கிளிகள் ரசிகராயின. அவையும் இணைந்து பாடின.
கிட்டார் வாசித்தபடி இளைஞர் ஒருவர் பலருக்கும் மகிழ்ச்சி அளித்து வந்தார். ஆனால் லாக்டௌனால் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனாலும் தன் விருப்பத்தின்படி அவர் வீட்டில் இருந்தபடியே கிட்டார் வாசித்து வந்தார். வீட்டில் அமர்ந்து தினமும் கிடாரில் ராகங்களை வாசித்து ஆனந்தம் அடைந்தார். அந்த இசைக்கு இரண்டு கிளிகள் ரசிகர்களாகி ஆடியன்சாக மாறின.
மும்பையைச் சேர்ந்த இளைஞர் கிடாரிஸ்ட் ஜதின் தாலுக்தார். இந்த கிடாரிஸ்ட் மியூசிக் வாசித்து மக்களை சந்தோஷப்படுவது வழக்கம். அதன் மூலம் பலருக்கும் மகிழ்ச்சி அளித்து வந்தார். ஆனால் லாக்டௌன் காரணமாக கிட்டார் வாசிப்பதை நிறுத்தவில்லை. தன் வீட்டில் ஒரு ஜன்னல் அருகில் அமர்ந்து அவர் கிட்டார் வாசிப்பது வழக்கம். அந்த இசைக்கு மயங்கிய இரண்டு கிளிகள் அவருக்கு ரசிகர்களாக மாறின. தினமும் அவர் கிட்டார் வாசிக்க ஆரம்பித்ததும் கிளிகள் அங்கு வந்து சேர்ந்து அவருடைய இசையை ரசிக்க ஆரம்பித்தன. கீச்சு கீச்சென்று அவருடைய ராகத்தோடு இணைந்தன. லாக்டௌனில் கிடைத்த புது ஆடியன்சைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். மேலும் மேலும் உற்சாகத்தோடு கிடார் வாசிக்க ஆரம்பித்தார்.

மும்பையைச் சேர்ந்த இந்த கிடாரிஸ்ட் இசையால் ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம். ஆனால் லாக்டௌன் காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்க நேர்ந்தது. வீட்டில் இருப்பதால் கிடாரை தூசி பட வைக்கவில்லை. தினமும் புதுப்புது இசையால் கிடார் இசைத்தார். முதல் சில நாட்களில் இசையை கேட்பதற்கு யாருமில்லை என்று வருந்தினார். ஆனால் இப்போது அந்த கவலையும் தீர்ந்தது.
இசைக்கு மயங்காதவர் யார் என்பது போல் இரண்டு கிளிகள் ஜதின் ஜன்னலருகில் நின்று கிட்டார் வாசிக்கும் போது ரசிகராக மாறின. அந்த கிளிகள் கோரஸ் பாடுகின்றன. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தார். இப்போது அந்த கிளிகள் தன் குடும்பத்தோடு அங்கத்தினர்களாக மாறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஷேர்செய்த வீடியோவை பார்த்தால் அது உண்மை என்றே தெரிகிறது .
அந்த கிளிகளுக்கு ஜதின் பெயர் கூட வைத்துள்ளார். ஜிம், கைரி என்று பெயர் சூட்டியுள்ளதாக ஜிதின் தெரிவித்துள்ளார். தன் இசையை என்ஜாய் செய்வதற்கு கடவுளே தூதர்களாக இரண்டு கிளிகளை அனுப்பி உள்ளார் என்று ஜிதின் கூறுகிறார். வீடியோ பாருங்கள்.