
லோகேஷ் செய்த மனைவி கமெண்ட் மீது சலசலப்பு…
“ஆந்திர மாநிலத்தில் ராஜாரெட்டியின் ராஜாங்கம் நடக்கிறது. அரசாங்கத்தை கேள்வி கேட்கும் ஒவ்வொருவர் மீதும் பழி தீர்த்துக் கொள்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட வேண்டும் என்றாலும் ஒய்சிபி கட்சியை கேட்டுத்தான் போடவேண்டுமா? கடைசியில் சொந்த மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும் முதலமைச்சர் ஜெகன் ரெட்டி பர்மிஷன் எடுத்துக்கொள்ள வேண்டுமா? இது என்ன ஒரு நிலைமை…?” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய முக்கிய காரியதரிசி நாரா லோகேஷ் செய்த கமெண்ட் மீது பரபரப்பு நிலவுகிறது.

அரசியல் விமர்சனங்களில் மனைவியைப் பற்றி எதற்காக கூற வேண்டும் என்று ஒய்சிபி எம்பி விஜயசாயி ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். பிராமணி பெயரை குறிப்பிடாமல் இவ்வாறு கூறினார்.
வெள்ளிக்கிழமை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பயணம் செய்த லோகேஷ் அச்சந்நாயுடு குடும்பத்தை விசாரித்தார். அந்த நேரத்தில் நிருபர்களோடு பேசுகையில் ஜெகன் அரசாங்கத்தின் மீது தீவிரமாக விமர்சனங்களை வீசினார். மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் செய்ய வேண்டும் என்றாலும் ஜெகன் ரெட்டி பர்மிஷன் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று சூடாக விமர்சனம் செய்தார்.
இதன் மீது ஒய்சிபி விஜயசாயி ரெட்டி தீவிரமாக கண்டனம் தெரிவித்தார். லோகேஷ் மனைவி பிராமணி பெயரை குறிப்பிடாமல் லோகேஷுக்கு பஞ்ச் டயலாக் விடுத்தார்.

” என்ன லோகேஷ்…? சொந்த மனைவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் போட வேண்டுமென்றால் ஜெகன் பர்மிஷன் வாங்க வேண்டி இருக்கிறதா? அப்படியா…? நீ அப்படித்தான் பர்மிஷன் வாங்கி உன் மனைவிக்கு போஸ்ட் போடுகிறாயா? ஏன் ஐயா.. அரசியலில் இல்லாத உன் மனைவியைக் கூட அனாவசிய பேச்சால் சண்டைக்கு இழுக்கிறாய்? ” என்று எம்பி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் லோகேஷின் விமர்சனத்திற்கு எம்பி கொடுத்த கவுண்டர் மீது மீடியாவில் வேறு வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.
லோகேஷ் சாதாரணமாக மனைவியை பற்றி கமென்ட் செய்தால் விஜயசாயி வேண்டும் என்றே லோகேஷ் மனைவி குறித்து பேசியுள்ளார் என்று நெட்டிசன்கள் அவர் மீது குறை கூறியுள்ளனர்.