
டிடிவி தினகரனுக்கு நமது எம்ஜிஆர் நாளேடு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா நேரடி பார்வையில் இயங்கிய நமது எம்ஜிஆர் நிறுவனம் நாளேட்டில் செய்தி விளம்பரம் என நாள் ஒன்றுக்கு லட்சத்தில் இருந்து கோடி கோடிகளாக ரூபாய்களை வருவாய் ஈட்டிய நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நிர்வாகம் கவனிக்க தவறியதால் ஊழியர்கள் வறுமையில் சிக்கியுள்ளதாக தகவல்..
சசிகலா சிறையில் அடைப்பு ஒருபுறம். தற்போதைய முதல்வர் எடப்பாடியும் தினகரனுக்கும் இடையே உள்ள விரிசல் மறுபுறம். மேலும் நமது எம்ஜிஆர் நாளிதழில் சந்தாதாரர்கள் பலர் வெளியேறி விட்டதாகவும் அதேசமயம் விளம்பர வருவாயும் குறைந்து விட்டதால் சொற்ப ஊதியம் பெற்ற ஊழியர்கள் குடும்பங்கள் தற்போது வறுமை பிடியில் சிக்கியுள்ளதாம்.
சசிகலா சிறையில் இருப்பதால் துணை பொதுச்செயலாளர் தினகரன் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்களாம்!



