சாலையில் சிலம்பம் சுற்றும் மூதாட்டி! வியக்கும் பாலிவுட் பிரபலங்கள்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
chilambam
chilambam

தெருவோரத்தில் நின்று அட்டகாசமாக சிலம்பம் சுத்திய மூதாட்டியை கண்டு வியந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் இணையத்தை கலக்கியது மட்டுமல்லாமல் , பாலிவுட் நடிகர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள புனேவில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருபவர் தான் சாந்தாபாய் கவார் எனும் 85 வயதுடைய மூதாட்டி, இவரது வயது முதிர்வால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை.

எனவே அவரது தந்தையிடம் கற்றுக்கொண்ட சிலம்பத்தை வைத்து சாலையோரங்களில் சிலம்பம் சுத்தி கிடைக்கும் கொஞ்ச பணத்தை வைத்து தனது வாழ்க்கை பயணத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த வீடியோவை கண்ட பாலிவுட் நடிகர்கள் சோனு சூத் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் பார்வையில் படவே, பாராட்டி வாழ்த்துதெரிவித்துள்ளனர். மேலும் சோனு சூத் மூதாட்டியை வைத்து சிலம்ப வகுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். மேலும், மூதாட்டியை உலக சுகாதார அமைப்பும் வியந்து பாராட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.