2 லட்சம் கடந்த பாதிப்பு; தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published:

corona-virus-4
corona-virus-4

இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு!
தமிழகம் – 6988
சென்னை – 1329
மரணம் – 89
குணம் – 7758

தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 1329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது  இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,537ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்  ஏற்பட்டுள்ளது சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5659 பேருக்கு கொரோனா  இன்று உறுதி செய்யப்பட்டது

அதேநேரம் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்  இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055ஆக  அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 89 பேர்   உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,409ஆக அதிகரித்துள்ளது. 

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 20 பேரும், மதுரை மற்றும் விருதுநகரில் தலா 9 பேரும், கோயம்புத்தூர், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும் கொரொனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:

district-wise-details-corona-july25
district-wise-details-corona-july25

Related articles

Recent articles

spot_img