தூக்கி அடித்த சிக்சர்! கார் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் விளையாட்டு
kevin

ஒரு கிரிக்கெட் வீரர் அடிக்கும் சிக்ஸர், மைதானத்தைத் தாண்டி வெளியே விழுந்தால் அதைவிட அந்த வீரருக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும்?

கிரிக்கெட் திறமை, வலிமையான உடற்தகுதி இரண்டையும் நிரூபிக்கும் தருணம் அது.

car

ஆனால் அப்படி அடிக்கும் சிக்ஸர், பேட்ஸ்மேனின் காரின் மீதே விழுந்து கண்ணாடியைச் சுக்கு நூறாக உடைத்த சம்பவத்தை உரைக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு

அந்த விநோத சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது.

அயர்லாந்தில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் லீன்ஸ்டர் அணியில் இடம்பெற்ற 36 வயது கெவின் ஓ பிரையன் 37 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார்.

இதில்தான் கெவின் ஓ பிரையன் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்று பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய டொயாட்டோ காரின் மீது விழுந்ததில் பின்பகுதிக் கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது.

ஆட்டம் முடிந்து வந்து தன் காரைப் பார்வையிட்ட ஓ பிரையன், பின்பகுதிக் கண்ணாடி முழுவதுமாக உடைந்திருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

kevin-car
kevin-car

வேறுவிதமாக காரின் கண்ணாடி உடைந்திருந்தால் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இது அவருடைய திறமைக்கான சான்று அல்லவா!

அதனால் சிக்ஸரால் உடைந்த காரின் கண்ணாடி அருகே அமர்ந்து பெருமையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து இத்தருணத்தைக் கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.