புரட்டிப் போட்ட கொரோனா! நடுரோட்டில் செருப்பு கடை போட்ட ஆசிரியர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
teacher-selling-shoes
teacher-selling-shoes
  • சாலையில் செருப்பு விற்கும் பள்ளி ஆசிரியர்.
  • ஐயோ பாவம்! எத்தனை கஷ்டம்!!
  • கொரோனா… அதைத்தொடர்ந்து வந்த லாக்டௌன் பலரை ரோடு மேல் இழுத்து வந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி இருந்த வேலையும் போய் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். எதிர்கால இளைஞர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் கூட தம் எதிர்காலத்தை எண்ணி வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலைகளை இழந்து சாலையில் வந்து அமர்ந்து உள்ளார்கள்.

விஜயவாடாவிலும் இதே நடந்துள்ளது. கொரோனா கொடுத்த அடியால் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறிப்போனது. குடும்பத்தை போஷிப்பதற்காக மெயின் ரோடில் செருப்பு விற்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த டி.வெங்கடேஸ்வர ராவு கணக்கு ஆசிரியர். இரு குழந்தைகள் உள்ளவர். விஜயவாடாவில் உள்ள மூன்று பிரைவேட் பள்ளிகளில் வெங்கடேஸ்வர் ராவ் பார்ட் டைம் ஜாப் செய்து வந்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார். அந்நிலையில் கொரோனா பரவல் அவரை கஷ்டக்கணக்கில் அழுத்தி விட்டது.

பொருளாதார நிலைமை திடீரென்று மாறிப்போனது. குடும்பத்தை காப்பது கூட சிரமமாகி விட்டது. அதனால் வேலைக்காக செருப்பு விற்பதற்குத் தீர்மானித்தார்.

விஜயவாடாவில் உள்ள பிஆர்டிஎஸ் சாலை மீது செருப்புகளை பரத்தி வைத்தி விற்று வருகிறார். கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஐந்து மாதங்களாக சம்பளம் இல்லை. கையில் ஒரு காசு இல்லை. யாரும் கடனும் கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி இவ்வாறு செருப்பு விற்பதாக வெங்கடேஸ்வரராவு கூறுகிறார்.

இவர் ஒருவர் மட்டுமே அல்ல. தெலுங்கு மாநிலங்களில் பிரைவேட் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமை இவ்வாறு அனைவரும் பரிதாபப்படும் படியாகவே உள்ளது.

இவ்வாறு வேலையிழந்த ஆசிரியர்கள் டிபன் சென்டர் நடத்துவதையும் வாழைப்பழ வண்டிகளை தள்ளிக் கொண்டு செல்வதையும் காண நேரிடுகிறது.

இந்த கொரோனா காலம் மக்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. என்று பிறக்கும் விடிவுகாலம்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.