டேட்டிங் ஆப் -னால் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்! சபலத்தால் வந்த சங்கடம்!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
dating-app

டேட்டிங் ஆப் மூலம் ஒரு அதிகாரியை தனிமையிலிருக்க வர சொல்லி, அவரிடமிருந்த நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் பலர் டேட்டிங் ஆப் அழகிகளிடம் உஷாராக இருக்க முடிவெடுத்துள்ளனர்

புனேவில் ஒரு பிரபலமான ஒரு மென் பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் ரவி என்ற 34 வயது நபர் தினமும் டேட்டிங் ஆப் மூலம் பல பெண்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருவார் .

இப்படி கடந்த ஆகஸ்டு 27ம் தேதியன்று ஒரு டேட்டிங் ஆப் மூலம் ஒரு அழகியோடு பேசி வந்துள்ளார் .அப்போது அந்த அழகி அவரோடு தனியாக சந்திக்கலாம் என்று கூறி அவரை ஒரு இடத்திற்கு வரச்சொன்னார் .

அந்த அழகியின் பேச்சை நம்பிய அந்த அதிகாரி புனே நகரில் அந்த பெண் சொன்ன இடத்திற்கு சென்றார் .அந்த இடத்தில அந்த பெண்ணுக்கு பதிலாக மூன்று ஆண்கள் நின்றிருப்பதை கண்டு ரவி அதிர்ச்சியடைந்தார் ,

அப்போது அவர் அங்கிருந்து கிளம்ப முற்ப்பட்டபோது அந்த மூன்று பேரும் ரவியை சுற்றி வளைத்து கடுமையான ஆயுதங்களால் தாக்கி அவரிடமிருந்த நகைகள் வாட்ச் ,பணம் போன்றவற்றினை பறித்து, சென்றனர் .

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி ,இந்த விஷயத்தை வெளியே சொன்னாலே அசிங்கம் என்று போலீசில் புகாரளிக்காமல் இருந்தார் ,
ஆனால் அவரின் நண்பர்கள் சிலரிடம் இந்த மோசடியை சொன்னபோது ,அவர்கள் உன்னை போல் மேலும் பலர் பாதிக்கப்படாமலிருக்க உடனே போலீசில் புகாரளிக்க சொன்னார்கள் .

அவர்களின் ஆலோசனையின் பேரில் அந்த அதிகாரி அந்த டேட்டிங் ஆப் மீது போலீசில் புகாரளித்தார் .இப்போது இந்த வழக்கை சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த ஆப் பில் மோசடி செய்த நபர்களை தேடி வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.